Breaking News
recent

துபாயில் பாலைவனப் பகுதியில் செயற்கை மலையொன்றை உருவாக்க திட்டம்.!


துபாயில் வருடாந்தம் 5 அங்குலம் வரை மழைவீழ்ச்சியை பெறும் ஐக்கிய அரபு எம்ரேட்டின் பாலைவனப் பகுதியில் செயற்கை மலையொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மழை மேகங்கள் கூடுவதற்காக நீராவியை சேர்க்கும் பணியில் மலைகள் பாரிய பங்கு வகிக்கின்றன.

பெரனைடை அளவில் 110 வரை வெப்பநிலை அதிகரிக்கும் டுபாய் உள்ளிட்ட எமிர் ராஜ்ஜியத்தின் நாடுகளின் உலர்ந்த காலநிலையே நிலவுகின்றது.

இந்தநிலையில், எமிரேட்ஸ் நாடுகளுக்கு மழையை பெறும் நோக்கில் வருடாந்தம் 5 லட்சம் டொலர் செலவில் செயற்கை மழையை தரும் ரசாயனம் விண்ணுக்கு செலுத்தப்படுகின்றது.

இதேவேளை, மழையை அதிகரிக்கும் நோக்கிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன.

இதன்காரணமாக, ஐக்கிய அமெரிக்காவுடன் கூட்டிணைந்து 230 பில்லியன் டொலர்கள் செலவில் 1.2 மைல் உயரத்திற்கு செயற்கை மலையொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் திட்டமிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.