Breaking News
recent

ஹஜ் பயணத்துக்கு முன்பதிவு செய்வோர் 'மோசடி பேர்வழிகளிடம் சிக்க வேண்டாம்.!


ஆண்டு தோறும் 25 ஆயிரம் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
பலர், பல ஆண்டு கால சேமிப்பைக் கொண்டு பல மாதங்களுக்கு முன்னதாகவே தமது பயணங்களை முற்பதிவு செய்து கொள்கிறார்கள்.
அதேநேரம், பதிவு செய்யப்படாத ஹஜ் பயண முகவர்கள் ஊடாக தமது யாத்திரையை பதிவு செய்து கொள்ளும் சில முஸ்லிம்கள், ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான பவுண்டுகள் பணத்தையும் இழக்கின்றனர்.
இவ்வாறான மோசடிக்காரர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நாடு முழுவதும் உள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கு பிரிட்டிஷ் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலிவான இடங்களை அடிக்கடி நாடிச் செல்வதால் இவ்வாறான மோசடிகளில் அவர்கள் சிக்கிக் கொள்வதாக தெரிவிக்கும் பிரிட்டிஷ் ஹஜ்ஜிஸ் கவுன்சிலின் அதிகாரி, அவர்களுக்கு போதுமான தெளிவூட்டலை வழங்கவேண்டும் என்கின்றார்.
இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றையும் லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது.
போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கடந்த ஆண்டு 49 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் லண்டன் காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட எல்லோருமே புகார் அளிப்பதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காக சவுதி அரசாங்கம் பல பில்லியன் டாலர் நிதியை செலவிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.