Breaking News
recent

வருகிற ஆண்டுகளில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணையம் தகவல்.!


இந்தியாவில் இளம் தலைமுறையினரின் திறன் வளர்ச்சி ஒருபுறம் வேகமாக வளர்ந்து கொண்டே சென்றாலும், மறுபுறம் மின்சார பற்றாக்குறையும் அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது. 

குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் (மாநிலங்கள்) மின்சார தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையிலான இடைவெளி வருகிற ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என ஆணையம் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளது.

அதன்படி 2015-16-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தின மின் பற்றாக்குறை சராசரியாக 1,875 மெகாவாட்டாக இருந்தது. இது 2021-22-ம் ஆண்டு காலத்தில் 18,753-லிருந்து 22,269 மெகாவாட்டாக அதிகரிக்கும் என கூறப்பட்டு உள்ளது. 

தெற்கு மண்டலத்தில் 2015-16-ம் ஆண்டில் 104 மெகாவாட்டாக இருந்த சராசரி மின்பற்றாக்குறை, 2021-22-ம் ஆண்டில் 4,872-லிருந்து 6,748 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

எனினும் இந்த காலக்கட்டத்தில் கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மண்டலங்களில் இருந்து 24,000 மெகாவாட் உபரி மின்சாரம் கிடைக்கும் என்பதால், 

அதை வைத்து மேற்கூறிய பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் எனவும் மின்சார ஆணையம் கூறியுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.