Breaking News
recent

விமானத்தில் போகும்போது கணக்குப் போடாதீங்க...!


விமானம் ஒன்றில் கணித சமன்பாடு ஒன்றை ஆராய்ந்துகொண்டிருந்த பேராசரியரை தீவிரவாதி எனக் கருதி சூசகத் தகவல் ஒன்றை வெளியிட்ட சக பயணியால் அந்தப் பேராசிரியர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
விமானப் பயணத்தின் போது கணித சமன்பாடு ஒன்றை தீர்த்துக் கொண்டிருந்த இத்தாலியப் பொருளியல் பேராசிரியரை தீவிரவாதி எனக் கருதி, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இரகசியமாக வெளியிட்ட தகவலை அடுத்து அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை அடுத்து விமானத்துக்குள்ளேயே விசாரிக்கப்பட்ட அந்தப் பேராசிரியர் எவ்வித பிரச்சனையும் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டார். இது தனக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியது என அந்தப் பேராசிரியர் பின்னர் தெரிவித்தார்.
மாநிறமும் கருமையான சுருள் முடியுமுடைய பேராசிரியர் குய்டோ மென்ஜியோ அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் இருந்து உள்ளூர் விமானம் ஒன்றில் பயணித்தபோதே இப்படியான நெருக்கடியை சந்தித்தார். அந்தப் பெண் தன்னை மன உளைச்சலுடன் பார்த்ததாக தெரிவித்த பேராசிரியர் மென்ஜியோ, விமானப் பணியாளர்களிடம் ஒன்றையும் அப்பெண் கொடுத்ததாக தெரிவித்தார்.
அதன் பின்னர் தன்னை விமான ஓட்டி மற்றும் அதிகாரி ஒருவரும் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதாக பேராசிரியர் மென்ஜியோ கூறினார்.விமானங்களின் பாதுகாப்பு நெறிமுறை அளவுக்கு அதிகமாக கண்டிப்பானதாக இருப்பதாகவும் அதனால் தம்மைப் போன்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் பேராசிரியர் மென்ஜியா கூறுகிறார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.