Breaking News
recent

வீட்டு வேலைக்காரியை கௌரவப்படுத்தி, பரிசுகள் கொடுத்து வழியனுப்பிய சவுதி குடும்பம்.!


தங்களது வீட்டில் 4 வருடங்களாக வேலை பார்த்து வந்த எதியோப்பிய நாட்டு ஹவுஸ்மெயிட் பெண் ஒருவருக்கு சவுதி குடும்பம் ஒன்று ரோஸ் மலர்களும், தங்க ஆபரணங்களும் மற்றும் பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்த சம்பவம்  ஏனைய சவுதி குடும்பங்களுக்கும் முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

தனது வீட்டில் நான்கு வருடங்களாக நேர்மையாகவும், உண்மையாகவும் எல்லோரோடும் அன்பாகவும் பழகி வேலை பார்த்து வந்த எதியோப்பிய நாட்டு பெண் ஒருவர் அவரது குடும்ப அவசர தேவையின் காரணமாக வீட்டுக்குச் செல்லும் போது அவரை ஆச்சரியத்தில் ஆழத்தும்படி பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்கள் சவுதியில் உள்ள ஒரு குடும்பத்தார்.

குறித்த பிரியாவிடை நிகழ்வில் சவுதி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறவிணர்களும் கலந்து கொண்டு அந்த எதியோப்பிய பெண்னுக்கு பரிசில்களும் வழங்கினார்கள்.

சவுதி அரேபியாவில் தங்கள் வீட்டில் வேலை செய்யும் கத்தாமா என்று சொல்லக் கூடிய ஹவுஸ்மெயிட் பெண்களுக்கு கொடுமைகள் செய்யும் சில சவுதிக் குடும்பங்களுக்கு மத்தியில் இத்தகைய குடும்பமும் ஏனையோருக்கும் முன்மாதிரியாகவுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.