Breaking News
recent

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி முதல் அம்மா பேங்கிங் கார்டு வரை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு.!


பெருந்துறை பரப்புரைக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். 

அதன் முதல்பிரதியை நாடாளுமன்ற துணை சாபநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார். 

தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் தனித்தனியான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்

* அரசு கேபிள் டிவி சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் விலையில்லா செட் ஆப் பாக்ஸ்

* தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதரார்களுக்கும் விலையில்லா கைபேசி

* தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்க நடவடிக்கை

* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்

* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை

* 2016-2021 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

* மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்

* பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்புள்ள கோ-ஆப்டெக்ஸ் கூப்பன்

* ஏழை எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா வங்கி அட்டை வழங்கப்படும்

*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

* சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்

* லஞ்சம் - ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்

* அங்கன்வாடி மையத்துக்கு கேஸ் அடுப்பு, குக்கர் வழங்கப்படும்

* மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படும்

* தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்

* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்

* மீனவர்களுக்கு தனி வீடு, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

* மீன்பதன பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது

* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்

* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்

*மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்

* மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய சேவை

* நூறு யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் கட்டணமில்லை

* வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு

* பேறுகால விடுப்பு 9 மாதகாலமாக அதிகரிக்கப்படும்

* பேருந்து நிலையம், வணிக வளாகம் மற்றும் பூங்காக்களில் இலவச வைஃபை வசதி

* மாநில அரசு ஊழியர்களில் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்

* அம்பேத்கரின் கொள்கையைப் பரப்ப ரூ.5 கோடியில் அம்பேத்கர் அமைப்பு உருவாக்கப்படும்

* மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைகால நிவாரண உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்

*நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வரை இலவசம்

* வழக்கறிஞர்களுக்கான சேமநலநிதி ரூ.17 லட்சமாக உயர்த்தப்படும்

* அம்மா குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.