Breaking News
recent

இந்தியா-பாகிஸ்தான்... எல்லை கடந்த நட்பு ஆகாஸ் எ தோஸ்தி' நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு.!


இந்தியா-பாகிஸ்தான்.. இருநாடுகளுக்கு மத்தியில் உள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இருநாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில், எல்லை கடந்த நட்பு "Friends Beyond Borders" என்ற அமைப்பின் சார்பில் 'ஆகாஸ் எ தோஸ்தி' (Aaghaz-e-Dosti) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இரு தினங்களுக்கு முன், டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டு 'எல்லைகளுக்கு அப்பால்' தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.

80க்கும் மேற்பட்டவர்கள் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் தங்கள் நட்பை உறுதி செய்யும் வகையில் பதாகைகளை கையில் பிடித்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

படத்தில் உள்ளவர்கள் இடமிருந்து வலமாக மேலே உள்ளவர்கள் :

1.அஞ்சலி (இந்தியா) -ஜமான்(பாகிஸ்தான்)

2.சந்தியா(பாகிஸ்தான்) -முதஸ்சிர்(இந்தியா)

கீழே உள்ளவர்கள் இடமிருந்து வலமாக :

1.பிரீத்தி(இந்தியா) -அவைஸ் அஹ்மத்(பாகிஸ்தான்)

2.யாஷிகா - மந்தியா

(இந்தியாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தங்கள் அன்பிற்குரியவர்கள் பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவித்தனர்)

இது ஒரு துவக்கம் தான் என்று கூறுகின்றனர் 'ஆகாஸ் எ தோஸ்தி' பொறுப்பாளர்கள்.

'எல்லைகளுக்கு அப்பால் நட்பு' என்பதை தாரக மந்திரமாக கொண்டு மாபெரும் பிரச்சார இயக்கம் நடத்தி, இருநாட்டு மக்களையும் முழுமையாக இணைத்திடும் வகையில் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்கின்றனர்.

மேலும், இதற்கான முகநூல் பக்கத்தை துவக்கி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.