Breaking News
recent

எண்ணெய் விலை சரிவு: வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்.!


கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் கட்டுமான தொழிலாளர்களாகவும், எலக்ட்ரீசியன்களாகவும் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். 


இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தங்களின் ஒப்பந்த விதிமுறைகளில் கெடுபிடிகளை அதிகப்படுத்தியது.

இதனால் பலருக்கும் பேசியபடி சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் மட்டும் சுமார் 1000 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருபவர்களும் கூட சம்பள பிரச்னை, அதிக நெருக்கடிதி உள்ளதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். 


பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு என்ற பெயரில் இந்திய தொழிலாளர்கள் பலரை வெளியேற்றி வருகிறது. இதனால் இந்தியர்கள் பலர் ஒரே நேரத்தில் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.