Breaking News
recent

காரில் ஏசி போட்டு தூங்கலாமா?


கோடைக் காலம் என்பதால் எல்லோரும் தங்களுடைய காரில் ஏசி உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். 

கார் ஓட்டும் போது ஏசி உபயோகிப்பது தவறல்ல. ஆனால் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி போட்டு உறங்குவது ஆபத்தில் முடிந்து விடும்.

பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கார் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது வரும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். 

அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு ஃபயர் வால், காரின் அடிப்பகுதி வழியாக காரினுள் வர வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு உள்ளே வரும் கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசிக்கும் போது நம் ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்து நமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏசியை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குவது நல்லது. அதாவது வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும்.

நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி பயன்படுத்தும் போது ரீ சர்குலேஷன் மோடில் (Recirculation mode) வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.