Breaking News
recent

கத்தாரில் இந்தியப் பணியாளர் மரணம்; 'விசாரணை நடக்கிறது.!


கத்தாரில், கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான அரங்க கட்டுமான தளங்களில் ஒன்றில் உயிரிழந்த இந்தியப் பணியாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்திவருவதாக 2022 உலகக் கோப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வேலைத்தளத்தின் நிலைமைகளால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை அவர்கள் மறுத்துள்ளனர்.
தோஹாவுக்கு வடக்கே, அல் கோர் என்ற இடத்தில் உள்ள அல் பாய்ட் விளையாட்டரங்க கட்டுமானத் தளத்தில், நோய்வாய் பட்டிருந்த நிலையில் ஜலேஷ்வர் பிரசாத் என்ற அந்த 48 வயது இந்தியர் கடந்த புதனன்று உயிரிழந்தார்.
கத்தார் உலகக் கோப்பை போட்டிக்கான கட்டுமானத் தளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமைகள் தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.
ஆனால், தொழில் சம்பந்தப்பட்ட காரணங்களால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தான் கத்தார் அதிகாரிகள் வாதிட்டுவருகின்றனர்.
கத்தார் உலகக் கோப்பை போட்டி அரங்கங்களை அமைத்தவரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தொழில்நிலைமைகளை கண்காணிப்பதற்கான சுயாதீனமான குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஃபிஃபா கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.