Breaking News
recent

இஸ்லாத்திற்கு 'மாறான' படங்கள் : 8 பேர் இரானில் கைது.!


இஸ்லாத்துக்கு மாறானதாக கருதப்படும் இணைய மாடலிங் நிறுவனங்களை சேர்ந்த எட்டு பேரை இரான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இரண்டு வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளன. மாடலகள் தலையங்கி அணியாமல் தோன்றும் புகைபடங்களை இன்ஸ்டாக்ராம், மற்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெஹ்ரானின் இணைய குற்றங்களுக்கான நீதிமன்றத்தின் தலைவர் பேசும்போது, ''இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராகவும், ஒழுக்கமின்மையான கருத்துகளை தயாரித்தது மற்றும் அதை பரப்பியதாக'' மாடலிங் நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், குற்றங்கள் புரிபவர்களை எதிர்கொள்வது நீதி துறையின் வேலை என்றும் குறிப்பிட்டார்.
இரானில் பொதுவெளியில் பெண்கள் தலையங்கியை அணிந்து தலைமுடியை மறைப்பது 1979ல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு கட்டாயமாகப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.