Breaking News
recent

லண்டனில் தமிழர்களால் 6கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் திறப்பு.!


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் ஒன்றினைந்து லண்டன் குரைடனில் உள்ள ப்ரிஜ்ஸ்டோக் சாலையில் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தொழுவதற்கான பள்ளிவாசலுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினர். இதற்காக   மொத்தம்  இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு போடப்பட்டு நிதி வசூல் செய்யப்பட்டது.
இதற்கு பல தரப்பில் இருந்தும் நிதிகள் கிடைக்கப்பெற்றது. இப்பள்ளி நேற்று முன்தினம் 22-5-2016(ஞாயிற்றுகிழமை)  திறப்புவிழா நடைபெற்றது.
இதில் இலங்கை ACJU தலைவர் அஷ் ஷேக் ரிஜ்வி முஃப்தி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இதனை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவாளர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களும் கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.
மேலும் இதில் தற்போது லண்டன் தேர்தலில் வெற்றி பெற்று முதல் இஸ்லாமிய மேயராக மேற்கு மாகாணத்திற்கு பதிவியேற்ற சாதிக் கான் அவர்களும் வருகைதந்தார். இந்த நிகழ்ச்சியில் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.