Breaking News
recent

பிரிட்டனில் சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்கும் மக்கள் : 6 ஆண்டுகளில் 37% வளர்ச்சி.!


பிரிட்டனில் ஒவ்வொரு மாதமும் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

கடந்த 6 வருடங்களில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 37% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், 1500 பள்ளிவாசல்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.


குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் பயில வரும் வெளிநாட்டு மாணவ மாணவிகள் மத்தியில் இஸ்லாத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.


முன்னாள் பிரதமர் "டோனி பிளேர்" மைத்துனி "லூரீன்" மற்றும் அவரது மகள் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

லூரீனின் மகள் குறிப்பிடும்போது, இஸ்லாமிய வாழ்க்கையில் தனக்கு அமைதியும் நிம்மதியும் கிடைத்திருப்பதாக கூறும் அவர், ஹிஜாப் அணியத்துவங்கிய பிறகு, கல்லூரியில் பேராசியர்கள் தொடங்கி அனைவர் பார்வையிலும் தனக்கு கண்ணியம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

14 வயது மாணவர் ஜார்ஜ் என்பவர் "பாங்கு" சப்தம் கேட்கும் போதெல்லாம் தனக்கு சுகமான அமைதி கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நட்பின் மூலம் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

15 வயது ஷீலா குறிப்பிடும் போது: உண்மையான அமைதி இஸ்லாத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.