Breaking News
recent

பங்களா தேஷத்தவருக்கு 300000 ரியால் உதவிய தொண்டு நிறுவனம்.!(வீடியோ இணைப்பு)


பங்களாதேஷைச் சேர்ந்த முஹம்மது அலி அக்பர் வாகனம் ஓட்டிச் செல்லும் போது விபத்து ஏற்பட்டு ஒரு நபர் இறக்க காரணமாகி விடுகிறார். இறந்த அந்த நபரின் குடும்பத்தவர் 'இரத்தப் பணம்' கேட்டுள்ளனர். வாகன விபத்தில் இறந்தவர் குடும்பம் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டும் 

என்பது சவுதி அரேபியாவின் சட்டம். அந்த குடும்பம் 300000 ரியால் இரத்தப் பணமாக கேட்டது.ஏழ்மை நிலையில் உள்ள முஹம்மது அலி அக்பரால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை. எனவே சிறையில் அடைக்கப்பட்டார். பணம் செலுத்தாத வரை அவர் வெளியில் வர முடியாது.

இந்த சம்பவங்களை கேள்வியுற்ற இத்திஹாத் அல்ராஜி என்ற தொண்டு நிறுவனம் முழு தொகையையும் செலுத்த முன் வந்தது. அதன்படி பணம் செலுத்தப்பட்டு அலி அக்பர் விடுதலை செய்யப்படுகிறார்.

அவ்வாறு விடுதலை செய்யப்படும் போது தவாத்மி என்ற ஊரின் முக்கிய காவல் துறை அதிகாரி அலி அக்பரை அருகில் அமர வைத்து 'இறைவன் உனக்கு நன்மையை நாடியிருக்கிறான். எவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து இறைவன் உன்னை விடுவித்திருக்கிறான். இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக. 


விடுதலையடைந்ததற்கு என் சார்பாக ஆயிரம் வாழத்துக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன்' என்று அக்பரின் நெற்றியில் அன்பினால் முத்தமிடுகிறார். கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒரு கைதியை தனது அருகில் ஒரு உயர் காவல் துறை அதிகாரி அமர வைத்து அன்பு முத்தங்களை பரிமாறுவது நாம் காண வேண்டிய காட்சி.

இறைவன் நம் அனைவரையும் இது போன்ற இக்கட்டுகளிலிருந்து காத்தருள்வானாக!

A Bangladeshi prisoner, Mohammed Ali Akbar, who was imprisoned after causing the death of a man in a car accident and was unable to pay the requested blood money, got a surprise of a lifetime when a charity decided to pay the SR300,000 demanded by the family. Police officials at Dawadmy said he was the ideal prisoner. Akbar believed he would spend the rest of his life behind bars before the charity, Itihad Al-Rajhi, came up with the money. This video shows the moment when he was told he will be released. - arab news

http://www.arabnews.com/node/711156

நன்றி-சுவனப்பிரியன் 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.