Breaking News
recent

2015 சிவில் சர்வீஸ் தேர்வு - தேர்ச்சி பெற்றவர்களில் 37 முஸ்லிம்கள்.!


2015 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்டது.

இதில் டெல்லியை சார்ந்த டினா பாபி தேசிய அளவில் முதலிடத்தையும், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த அதார் அமிருல் ஷபி கான் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். அதார் கான் தென் காஷ்மீரில் உள்ள தேவிபுரா கிராமத்தைச் சார்ந்தவர்.

22 வயதில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம் காஷ்மீரிலேயே இளம் வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையும் இவரைச் சாரும். 

2010 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த Dr.ஷா பைசல் முதலாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வில் 38 முஸ்லிம்கள் தேர்ச்சிபெற்றிருந்தனர்.

இந்தமுறை, 2015 ஆம் ஆண்டில் மொத்தம் 37 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தரவரிசைப்படி அதர் கான் மட்டுமே ஐஏஎஸ் கிடைக்கும் வாய்ப்புள்ளது, மற்றவர்கள் ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் பிற பிரிவுகளில் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.