Breaking News
recent

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு: 104 சேவையில் சிறப்பு ஆலோசனை.!


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாவதைத் தொடர்ந்து, 104 மருத்துவ சேவையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேர்தலினால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு குழப்பமான சூழலில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.


வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், தேர்வு முடிவு வெளியாகும் சமயத்தில் மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் 104 மருத்துவ சேவையில் வழங்கப்பட உள்ளது.


 தேர்ச்சி பெறாத மாணவர்கள், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றோர், பொதுத்தேர்வு தொடர்பான மனக்குழப்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதற்காக உளவியல் மருத்துவர், சமூக உளவியல் நிபுணர், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மே 17, 18 ஆகிய தேதிகளில் பணியாற்றுவர். 24 மணி நேரமும் இந்தச் சேவையைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.