Breaking News
recent

பட்டதாரி+பட்டயதாரி ஏழைப் பெண்களுக்கு திருமணத்துக்கு1பவுன் இலவச தங்கம் ஜெ.அறிவிப்பு.!


முதல்வர் ஜெயலலிதா இன்று ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்ததும் முதலில் போட்ட கையெழுத்துக்களில் ஒன்று திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் தரும் திட்டம் ஒன்றாகும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதில், திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று முதல்வர் பிறப்பித்த முதல் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50,000 ரூபாயும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ. 25,000 நிதி உதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, அனைத்து திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.