Breaking News
recent

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்.!


குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 11ம் ஆண்டு மாபெரும் "இஸ்ராஃ / மிஃராஜ்" சிறப்பு நிகழ்ச்சிகள் "அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு! " என்ற கருப்பொருளில் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் மே 5, 2016 அன்று இரவு குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. 

வெள்ளிக்கிழமை (06.05.2016) அன்று நண்பகல் அதே பள்ளிவாசலிலும், அன்று மாலை ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் நடைபெற்றன. சனிக்கிழமை (07.05.2016) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிறைவுற்றது. 

இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி, மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியர் பன்னூலாசிரியர் ஆய்வாளர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஸ்தஃபா மஸ்லஹி எம்.ஏ.அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 

(1) அல்லாஹ் - உருவமில்லா ஒப்பற்ற இறைவன் 
(2) திருக்குர்ஆன் - பிழைகள் இல்லா பொக்கிஷம் 
(3) உத்தம நபி (ஸல்) கட்டமைத்த உயர் சமுதாயம் 
(4) இஸ்ராஃ / மிஃராஜ் - பாடங்களும்... படிப்பினைகளும்... 
(5) ஷிர்க்கை ஒழிப்போம் - போலி தவ்ஹீதை அழிப்போம்! மற்றும் 
(6) மத்ஹபுகள் - உண்மையும்... தெளிவும்... அவசியமும்... ஆகிய ஆறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன்" இளம் மார்க்கப் போராளி" விருது வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆலங்குடி மவ்லவீ காரீ முனைவர் கவிஞர் பன்னூலாசிரியர் நூ.அப்துல் ஹாதி பாகவீ பி.எச்டி.அவர்களின் "எளிய முறையில் திருக்குர்ஆனை ஓதக் கற்போம் - தஜ்வீத் சட்டங்கள்" 

அடங்கிய இரண்டு காணொலிக் குறுவட்டுகள் வெளியிடப்பட்டன. பல முக்கிய பிரமுகர்கள் குறுவட்டுகளை பெற்றுக்கொண்டார்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவி ஹாஃபிழ் எம்.முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். 

பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். சிறப்பு விருந்தினரின் பிரார்த்தனையுடன் நிறைவுற்றன. 

மூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத்தில் வசித்து வரும் சுமார் 2,000 (இரண்டாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். 

அனைவருக்கும் இரவு உணவு, தேநீர், குளிர்பானம், இனிப்பு மற்றும் பேரீத்தம் பழம் ஆகியவை வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.