Breaking News
recent

போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் ஒரு வருடம் சிறை மற்றும் 10000 அபராதம்.!


நாட்டில் மூன்றில் ஒரு ஓட்டுநர் உரிமம் போலியானதாக உள்ளதால் மோட்டார் வாகனச்சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இந்தியாவில் 3 ல் ஒருவர் போலியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் சாலை போக்குவரத்தை மீறுபவர்கள், போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் யூனுஸ்கான் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதன்படி விரைவில் மத்திய அரசு புது மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் போலியான சைசென்ஸ் தயாரித்த கும்பல் கைதான சம்பவங்கள் நடைபெற்றன. போலியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 3 மாத சிறைத் தண்டனை, ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. 

தற்போது ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வரையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி படுகாயம், உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். அதன் படி 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் வாகன பதிவும் ரத்து செய்யப்படும்.

இதனை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேற்று பேட்டி அளித்த அவர், “ஓட்டுநர் உரிமங்களில் 30% போலி என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு 5 கோடி பேர் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் சோதனை நடத்தும் திட்டத்தை ஆன்லைனில் தொடங்க உள்ளோம்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என எவருக்கும் ஓட்டுநர் உரிமம் பெறும் சோதனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க முடியாது. இந்த திட்டம் மிகமிக வெளிப்படையாக இருக்கும்.

 ஆண்டுதோறும் ஒண்ணரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதை தடுக்க மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டம், ஓட்டுநர் உரிமம் பெறுவது முதல் போக்குவரத்து நடைமுறைகள் அனைத்திலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். 

மேலும், 5000 ஓட்டுநர் மையங்கள் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான மசோதா, இந்திய சாலைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.