Breaking News
recent

பல கனவுகளுடன்10 வருடங்களுக்கு முன்பு குவைத் வந்த தமிழக நபர் சிராஜ் சில நல்ல உறவுகள் முயற்சியால் தாயகம் திரும்பினார்.!


கடந்த பத்து வருடங்களுக்கு முன் பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் குவைத் வந்து சேர்ந்த சேலம் மாவட்டம் தம்மம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சிராஜ் என்ற சகோதரர் தன் முதலாளியின் ஆட்டு மந்தையில் ஆடு மேய்க்கும் பனியில் அமர்த்தப்பட்டு கொட்டடிமை போல் நடத்தப்பட்டுள்ளார்.

சரியான உணவோ சுகாதாரமோ இல்லாமல் ஆடுகளோடு ஆடாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த பத்து வருடமாக தாயகம் செல்ல முடியாமல் கொட்டடிமையாக இருந்த இவரை குவைத் மண்டலம் ரிக்கா கிளை சகோதரர்கள் மீட்டு பல நாட்கள் குளிக்காமல் சாப்பிடாமல் இருந்த அவருக்கு முதலுதவி செய்து பராமரித்து மண்டல தலைமையிடம் ஒப்படைத்தனர்..

மண்டல நிர்வாகிகள் சகோ முத்துப்பேட்டை சமீர் மற்றும் சகோ கூனிமேடு இலியாஸ் ஆகியோர் இவரை தாயகம் அனுப்பும் பணியில் இறங்கினர்.

 இந்திய தூதரகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி சகோதரர் சிராஜ் தாயகம் செல்வதற்கான ஆவனங்களை தயார் செய்து பல நாள் போராட்டத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் நேற்று 16-5-2016 அன்று தாயகம் சென்றடைந்தார்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே...





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.