Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிளஸ்1 தேர்வு முடிவு வெளியீடு.!


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்தப் பள்ளிகளில் இன்று(2ம்தேதி) வெளியிடப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித் திருப்பதாவது :   

 பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-2016ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 4906 மாணவ,மாணவியர், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1,144 மாணவ,மாணவியர், சுயநிதிப் பள்ளிகளில் 2,161 மாணவ,மாணவியர், மெட்ரிக் பள்ளிகளில் 1,055 மாணவ, மாணவியர் என மொத்தம் 70 மேல்நிலைப் பள்ளிகளைச்சேர்ந்த 9,266 மாணவ, மாணவியர் பிளஸ்1 தேர்வுகளை எழுதிமுடித்துள்ளனர்.

இதற்கான விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(2ம் தேதி), அந்தந்தப் பள்ளிகளின் தகவல்பலகைகளில் பிளஸ்1 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கான தேர்வுமுடிவுகள் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் ஒட்டப்படவுள்ளன. 


இதனை பள்ளி மாணவர்கள் நேரில்சென்று அறிந்துகொள்ளலாம் என முதன்மைக் கல்விஅலுவலர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.