Breaking News
recent

நடுரோட்டில் காரை நிறுத்தி இஸ்லாமியர்களை சந்தித்த ஜெயலலிதா (video).!


விமான நிலையம் செல்லும் வழியில் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்தி முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமியர்களை சந்தித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்ககாக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பரபரப்பாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவும் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்ற இலக்குடன் ஹெலிகாப்டர் மூலம் சூறாவளி போல பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். 

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். 

25 முஸ்லீம் பெண்கள் உட்பட 75 பேர் கோட்டூர்புரம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த ஜெயலலிதா திடீரென அவருடைய காரை நிறுத்தினார். 

அப்பொழுது அ.தி.மு.க.வின் உறுப்பினரும், நடிகருமான பஷீர் என்ற விஜய்கார்த்திக் மற்றும் வேளச்சேரி பள்ளிவாசலை சேர்ந்த அபு ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் அருகே சென்றனர்.

 அப்போது ஜெயலலிதாவை சந்தித்த விஜயகார்த்திக் அவருக்கு திருகுரானை பரிசாக அளித்தார். அதை பெற்றுகொண்ட ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

இதுகுறித்து நடிகர் விஜய்கார்த்திக் கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன எனவும், குறிப்பாக ரம்ஜானுக்கு கஞ்சி காய்ச்ச இலவச அரிசி, வக்பு வாரியத்தின் 5  ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுத்தது, உலமாக்களுக்கு பென்சன் திட்டம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை இந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளதற்கும், தேர்தலில் பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் சேர்க்காததற்கும் நன்றி தெரிவித்ததாக கூறினார்.

நன்றி: விகடன் டிவி


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.