Breaking News
recent

உயிரை பணயம் வைத்து சவுதி அரேபியர் உயிரை காத்த பாகிஸ்தானியர் : நற்கூலி வழங்கிய முடிக்குரிய இளவரசர் (Video)


கடந்த புதன்கிழமை காலை ஆறு மணி இருக்கும், ஆறு பிள்ளைகளின் தந்தையான பஹ்த் அல் கஹ்தானி என்ற சவுதி குடிமகன் ஒருவர் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வேளையில், தனது உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானி ஒருவர் அந்த சவுதி பிரஜையின் உயிரை காத்த சம்பவம் ஒன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்ப்பில் பாதிக்கப்பட்ட அல் கஹ்தானி பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
நான் சில பொருட்கள் வாங்குவதற்காக நகருக்கு சென்று திரும்பி வரும் போது, பள்ளத்தாக்கு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், திடீர் என ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் எனது கார் சிக்கி மூழ்கி விட்டது.
அப்போது வேறு வழியின்று எனது காரின் மீது ஏறி உதவி கோரினேன்; மக்கள் ஒன்று திரண்டனர், சம்ப இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு படையினர் உயிர் காப்பு அங்கி ஒன்றை கயிறில் கட்டி என்னை நோக்கி எறிந்தனர். அது என்னை வந்தடையாமையினால் அவர்களால் என்னை மீட்க முடியாமல் போய் விட்டது. கிரேன் இயந்திரம் ஒன்று கொண்டுவரும் வரையில் கொஞ்சம் பொறுத்திரு என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில், அதிகரித்துக் கொண்டே செல்லும் வெள்ளப் பெருக்குக்கு மத்தியில் கொஞ்ச நேரத்தை கடத்துவது பல நாட்களை கடத்துவது போன்று இருந்தது.
இந்த வேளையில் தனது உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் பாய்ந்த ஷவ்கத் அமீன் அலி என்ற அந்த பாகிஸ்தானியரே எனது உயிரை காத்தார் என்றார் அல் கஹ்தானி.
மேற்படி பாகிஸ்தானியருக்கு அந்த சவுதி பிரஜை சன்மானம் வழங்கியதுடன், சவுதி முடிக்குரிய இளவரசரும் சன்மானம் வழங்கியதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன. 


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.