Breaking News
recent

உலகம் முழுவதும் தன்னம்பிக்கை மற்றும் NLP பயிற்சியளிக்கும் ராமநாதபுர மாவட்ட பெண்மணி ஃபஜிலா ஆசாத்துக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு.!


துபாயில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஃபஜிலா ஆசாத் பல்வேறு  நாடுகளுக்கும் சென்று இளைய தலைமுறையினருக்கு  தன்னம்பிக்கை மற்றும் மன நலம் தொடர்பான  வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார். 

கவிஞர், கட்டுரையாளர், நகை வடிவமைப்பாளர், சொற்பொழிவாளர், மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் ஃபஜிலா ஆசாத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த போது Nlp- neuro linguistic programming மற்றும் ஆழ் மன மொழி குறித்த விளக்கங்களை கமல்ஹாசன் இவரிடம் ஆர்வத்தோடு கேட்டறிந்தார். 


அதோடு இவர் எழுதி  கல்லூரிகளில் பாடமாக சேர்க்கப் பட்டுள்ள 'திறந்திடு மனசே...' என்ற  உளவியல்  நூலையும் பெற்றுக் கொண்டு இவரின் பணிகளை பாராட்டினார்.
 
'எத்தனை சிகரம் தொட்டாலும்,எவ்வளவு கற்றறிந்தாலும், எந்த ஒரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொள்ள உலக நாயகன் கமலஹாசன் காட்டும் ஆர்வமும், ஈடுபாடும், பாராட்டக் கூடியது மட்டுமல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் கூட' என்கிறார் ஃபஜிலா ஆசாத். இவர் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து  துபாயில் எம்.பி.ஏ பைனான்ஸ் படித்தார். 


அதோடு எத்திக்கல் ஹேக்கர்ஸ்’ தொடர்பான கல்வி, நகை டிசைன் பயிற்சி கல்வி, பிசினஸ் சைக்காலஜி, லீடர்ஷிப் ஸ்கில் டெவலப்மெண்ட்  என பல் வேறு பயிற்சிகளை நிறைவு செய்து பட்டங்களை பெற்றுள்ளார். 

அதோடு மன நலம் தொடர்பான Master NlP practitioner, Master Nlp coach, Master Hypnotism,Time paradigm technique practioner , ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவர் பல நிறுவனங்களின் தொழில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.