Breaking News
recent

இப்படியும் சில மனிதர்கள்... எனக்கு கிடைத்த கசப்பான அனுபவம்.!


இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் கடனாக என்னிடம் ஒரு தொகைப் பணத்தை கேட்டார் நானும் அவர் கேட்டவுடன் அந்த தொகையை கொடுத்தேன் அதன்பின்னர் ஆறு மாதங்கள் கழித்து கடனில் பாதியை எனக்கு திருப்பிக் கொடுத்தார்.

சில மாதங்கள் சென்றது என்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார்  நான் வேறு தேவைகளுக்கு அவருடைய  கைத்தொலைபேசிக்கு  அழைத்தாலும் பதில் வராது இப்படியே ஒரு நாள் எனது மற்றைய நண்பரிடம் அவருக்கு என்ன நடந்தது ஏன் என்னுடன் பேசுவதில்லை என விசாரித்தேன் (அந்த நண்பரும் அவருக்கு நண்பர்தான்), அந்த நண்பர் கூறினார்,

 உனது கடனை திருப்பிக்கொடுக்கும்  வரை உன்னோடு பேச அவருக்கு வெட்கமாக இருக்கின்றதாம் அதனால்தான் கடனை தந்தவுடன் உன்னோடு பேசுவாராம் என கடன் வாங்கிய நண்பர் கூறியதாக் மற்றைய நண்பர் என்னிடம் தெரிவித்தார்.

அதற்கு நான் நண்பரிடம் கூறினேன் நான் பணத்தை தருமாறு ஒரு போதும் அவரை வற்புறுத்தி கேட்கவில்லையே.. அவர் தருகின்ற நேரத்தில் தரட்டும் முதலில் அவரை என்னிடம் பேச சொல்லுமாறு  கூறினேன் ஆனால் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை..

இன்று இரண்டு வருடங்களின் பின்னர் நேற்று அவருக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி ஒன்று அனுப்பினேன் எனது பணத்தை ஏற்பாடு செய்யுமாறு..

அதை பார்த்தவுடன் அவர் எனக்கு ஒரு பதில் அனுப்பினார்

  "நான் உங்களுக்கு நிறைய சாப்பாடு தின்னக்கொடுத்துள்ளேன்  அதனை முதலில் திருப்பி கொடுங்கள் அதுக்கு பிறகு உங்கள் பணத்தை தருகின்றேன் என்றார்" எனக்கு ஒரே அதிர்ச்சி..

 அதாவது எனது பணத்தை இழந்ததுக்காக அல்ல இப்படியும் மனிதர்கள்  பணத்துக்காக எவ்வளவு கேவலமாக  நடந்து கொள்கிறார்களே என்று நினைத்து வருந்தினேன்..

அதுக்கு பிறகு  நான் அவருக்கு பின் வருமாறு பதில் வழங்கினேன் " நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்ததுக்கு கூலி வேண்டும் என்றால் எனது பணத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் நீங்களே  வைத்துக்கொள்ளுங்கள் " என அவருக்கு கூறினேன்..

நண்பர்களே நீங்களும் நிதானமாக உங்கள் நண்பர்களுடன் பழகிக்கொள்ளுங்கள் கடன் உறவை முறிக்கும் என்று அன்று எமது முன்னோர்கள் இதனால்தான் கூறினார்கள் நாளைக்கும் உங்களுக்கு இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறலாம்...

நான் கவலை கொள்கிறேன் எனது பணத்துக்காக அல்ல பணம் எவ்வாறு மனிதனை ஏமாற்றுகின்றது என்றே..

பிகு: அவரும் நானும் வசிப்பது சவுதி அரேபியாவில். அவர் வேலை செய்வது ஒரு பிரபல உணவகத்தில் அங்கு இருந்து கொண்டு வரும் உணவுகளையே அவரின் வற்புறுத்தல் மூலமே அதனை நான் வாங்கி சுவைத்தேன்.

-இப்படிக்கு ஒரு பாவப்பட்ட ஜீவன் -
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.