Breaking News
recent

மக்காவில் இருந்து தாயிப்fற்கு.!கண் கலங்கச் செய்யும் காணொளி.!


எம் உயிரிலும் மேலான அன்பு நபி (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் இந்த உம்மத்தின் ஈடேற்றத்திற்காக ( ஏன் எம் ஒவ்வொருவரினதும் ஈருலக வெற்றிக்காக ) தம்மை முழுமையாக அர்ப்பணித்து, 

அன்னார் மேற்கொண்ட எண்ணிலடங்காத  பெரிய தியாகங்களில் ஒரு சிறு துளியை ஒரு காணொளி வடிவில் நாம் பார்த்து, அதனை எமது மனத்திரை முன்னே நிலைநிறுத்தி அவர்களின் தியாகங்களை சற்றேனும் நாம் உணர்ந்து கொள்ளவும் அதனூடே எமது வாழ்கையை அவர்களது வழிகாட்டல்களின் படி அமைத்துக் கொள்ளவும்  ஆவன செய்வதே எனது இப்பதிவின் நோக்கமாகும்.

ஆம் அன்னார் மேற்கொண்ட அவ்வாறான மிகக் கடினமான பணிகளில் ஒன்றுதான் தாயிப்f  இற்கான அன்னாரது  தஹ்வாப் பயணம். சவால்கள் நிறைந்திருந்த அப்பயணத்தில் அன்னவர்கள் சந்தித்த பயணப்  பாதையானது ( மக்காவில் இருந்து தாயிப்f வரை ) சுமார் 100 KM தூரமுடையதாகும் 

என்பது எம்மில் பலருக்கு தெரியாது. ( மக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமம் என்றே தாயிப்fஐ பற்றி எம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்)

 இன்று  Facebook இல் எதேற்சையாக எனது கண்ணில் பட்ட மக்காவில் இருந்து தாயிப்f செல்லும் பாதையை காண்பிக்கும் காணொளி தான் இப் பதிவை இங்கே கொண்டு வரும் படி என்னை தூண்டியது. 

ஆம் குறித்த பாதையானது உயரமான  மலைகளாலும் குன்றுகளாலும் கற்பாரைகளாலும் சூழப் பட்ட, கரடுமுரடான, ஆபத்தான பாதையாகும். குறித்த பாதை இன்று பொழிவு பெற்று, மின்குமில்களால் அலங்கரிக்கப் பட்டு, நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டுள்ள போதிலும் இன்றளவிலும் அது  எவ்வளவு ஆபத்துகள் நிறைந்த பாதையென்பதை கீழே தரப்பட்டுள்ள காணொளியை கண்ட மாத்திரத்திலேயே நாம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அப்படியானால் 1450 வருடங்களுக்கு முன்பு  எவ்விதமான பாதுகாப்போ தொழில் நுற்பமோ வசதிவாய்ப்போ கலைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளோ அற்ற, மலைக் குன்றுகளாலும் பாராங்கற்களாளும்  சூழப் பட்ட,  சுமார் 100 KM தூரம் கொண்ட கரடுமுரடான  அப் பயணப் பாதையின் நிலை எவ்வாறிருந்திருக்கும் ? சுப்ஹானள்ளாஹ். ஆம்  சகோதரர்களே ! 

 எமது  கண்மணி ஹபீப் ( (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் மக்காவிற்கு வெளியே முதன் முதலாக சந்தித்த சவால் மிக்க தாஇப்f இற்கான தஹ்வாக் களமானது மேற்சொன்ன கடும் ஆபத்துகளை கொண்ட பாதையை ஊடறுத்துச் செல்வதிநூடாகவே அமைந்திருந்தது.


இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் தஹ்வாவுடைய களத்தில் அன்னார் சந்தித்த மிகவும் துயர்மிக்கதொரு பயணம் தான் தாயிப்f நகரிற்கு அல்லாஹ்வின் தூதை அவர்கள் சுமந்து சென்றபோது முகம் கொடுத்த கொடுமைகளும் இன்னல்களும் மிக்க பயணம். 

அல்லாஹ்வின் தூதை முழுமையாக மறுதலித்த தாயிப்f வாசிகள் அள்ளாஹ்வின் தூதரை இம்சித்து, இழிவு படுத்தி, அடித்துத் துன்புறுத்தி, விரட்டியடித்த போது கால்ப்பாதங்களில் இரத்தம் சொட்டியவர்களாக மீண்டும் மக்காவை நோக்கி புறப்பட்டதும் மேலே கூறப் பட்ட அதே கரடுமுரடான  பாதையில் தான்.

ஆம் சகோதரர்களே ! கூறியவைகளை மனத்திரையில் இருத்திக்  கொண்டு  கீழே தரப் பட்டுள்ள மக்காவிற்கும் தாயிப்fஇற்கும் இடையிலான இன்றைய சொகுசான பாதையை 1450 வருடங்கள் பின்னோக்கிய சிந்தனையுடன்  உன்னிப்பாக உற்று நோக்குங்கள். 

எம் உயிரிலும் மேலான கண்மணி  (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம் ) எமது ஈடேற்றத்திற்காக செய்த தியாகங்களில் ஒரு துளியையேனும் கண்டுணர இக் காணொளி ஒரு காரணமாக அமையலாம்.

யா அள்ளாஹ் ! அவர்கள் மீது மென்மேலும் உனது அருட்களை மழையாக சொறிந்து, அவர்களது அந்தஸ்தை மேலும் உயர்த்தி, அவர்களது திருக் கரங்களால் நாம் ஹவ்லுல் கவ்ஸர் நீர் அருந்தி, அன்னாரின் ஷபாஅத்துடன் சுவர்க்கம் சென்று,  அன்னாரது சந்திப்புக்களை சுவர்க்கத்தில் என்றென்றும் பெற்றிடும் நற்பாக்கிய  சாலிகளாக எம்மையும் பொருந்திக் கொள்வாயாக.

ஆம் தாயிப்fஐ நோக்கிய பயணத்தை குறித்த காணொளியிநூடக பார்கின்ற போது 30 வருடங்களுக்கு முன்பு  சிறுபிள்ளையாக இருந்த போது செவியுற்ற இஸ்லாமிய கீதம் இன்று ஒலிப்பது போன்றதொரு உணர்வு என்னுள்ளே.

தாயிப்f நகரத்து வீதியிலே
எங்கள் தாஹா ரஸூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை
என்னிப் பார்த்தால் நெஞ்சம் துடிக்குதம்மா
கண்கள் கண்ணீரை வடிக்குதம்மா ...... 

வீடியோவை காண 

https://www.facebook.com/mumtaz.akhtar1/videos/998195456940335/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.