Breaking News
recent

உலகின் பெரும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கத்தாரில் சந்திப்பு.!

எண்ணெய் விலைகளை அதிகரிக்கும் முயற்சியாக, உற்பத்தியை குறிப்பிட்ட அளவுகளுக்குள் வைத்திருப்பதற்கான யோசனை பற்றி விவாதிப்பதற்காக உலகின் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் பலவற்றின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுநடத்துகின்றனர்.
கத்தாரில் கூடியுள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் பல, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்த விலையிலும் பார்க்க அரைவாசிக்கும் கீழே கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
உற்பத்தியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், விலைகளை உயர்த்த முடியும் என்று சவுதி, ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகள் நம்புகின்றன.
ஆனால், இன்னொரு பெரிய ஏற்றுமதி நாடான இரான், உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு இணங்கமுடியாது என்று கூறியுள்ளது.
இன்றைய சந்திப்பிலும் இரான் கலந்துகொள்ளவில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.