Breaking News
recent

சவுதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்.!


சவுதி அரேபியாவில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும்.

அந்நாட்டு தொழிற்துறை அமைச்சு இத்தகையதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது.

மொபைல் சாதன தொழிற்துறை , விற்பனை , பராமரிப்பு , உதிரிப்பாகங்கள் என அனைத்திலும் இனி சவுதி நாட்டுப் பிரஜைகள் மட்டுமே பணியாற்ற முடியும்.

இது செப்டம்பர் மாதம் 2 முதல் முற்றாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் ரமலானிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.  

இத்துறையில் இணையவிருக்கும் சவுதிப் பிரஜைகளுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக குறிப்பாக வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சட்ட நிபந்தனையை மீறினால் பெரும் தொகை தண்டப்பணம் அறவிடப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.