Breaking News
recent

துபாயில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி.!


துபாயில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற த‌மிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியோடு  தமிழ்த்தேர் நண்பர்களின் சார்பில் ஒன்றுகூடல் நிகழ்வும் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து செல்வி ஆனிஷா பானு பாடினார்.  நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேர் தலைவர் லெ.கோவிந்தராஜ் தலைமையேற்றார்.  அஜ்மான் மூர்த்தி, .குத்தாலம் அஷ்ரப் முன்னிலை வகித்தனர். .மீரான், .பட்டணம் மணி,  ஆசிப் மீரான், ஜெஸிலா, .கலையன்பன் போன்ற அமீரகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


செல்வி நிவேதிதா குழுவினரின் நாட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றன.  செல்வி ஹர்ஷினியின் பாடல், செல்வி ஸ்ரேயாவின் கவிதை, செல்வன் அரவிந்த் பாரதியின் பலகுரல் நிகழ்வு என பல்சுவையும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன.  

தமிழ்த்தேர் வானொலி 100.10 என்கிற புதுமையான நிகழ்வை திருமதி.ரமா மலர்வண்ணன் மற்றும் திரு.நாகா நடத்தி தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பல்வேறு புதிய தகவல்களை வழங்கினர்.
 
ஒரு பன்முக நேர்க்காணல் என்னும் புதுமையான நிகழ்ச்சியில் .... தலைவர் லெ.கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், லட்சுமி நாராயணன்,  நர்கீஸ் பானு, முதுவை ஹிதயத்துல்லா, குளச்சல் ஸ்டில்ஸ் இப்ராஹிம், கவிஞர் யமுனாலிங்கம், 


முத்துப்பேட்டை ஷர்புதீன், ஹெல்த் கணேசன், சசிகுமார், நேசத்திற்குரிய நாகா., ஆகியோரை நோக்கி திருமதி.ரமா மலர்வண்ணன், திருமதி.உமா பாலாஜி, திருமதி.பிரியா கதிர்வேல், கவிஞர் தஞ்சாவூரான், ஹேமலதா, .ஸ்ரீதேவி ராஜா, மீரான் முதலானோர் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
 
விழாவில் தமிழ்த்தேரில் வெளியான 'ஆ கலாம் ஆகலாம்!' சிறப்பிதழின் அச்சுப்பதிப்பும்.. தமிழ்த்தேரின் 100வது சிறப்பிதழான 'பாராட்டு' ஆகிய இதழ்கள் வெளியிடப்பட்டன.   சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கோவி.

தாமரைச் செல்வன் தமிழகத்திலிருந்து கலந்து கொள்ள, முனைவர் பஃஜிலா ஆசாத் அவர்களும் பாராட்டு பற்றி பங்கேற்றோர் மனதில் மயிலிறகு வருடல்களாய் மென்மையாய் பேசினாலும்.. 

சொன்ன சொல்லெல்லாம் உண்மையின் ஊர்வலமாய்.. எதார்த்தங்களின் வெளிப்பாடாய்..  இனியதொரு உரையாற்றியாற்றினார். பட்டிமன்றம், தொலைக்காட்சிப் புகழ் தாமரைச் செல்வன் அவர்களின் அரங்கையே அதிர வைத்த சிறப்புரை.. முற்றிலும் கைத்தட்டல்களை அள்ளிச்செல்ல..  புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதையை முத்தாய்ப்பாய் வழங்கி  நிறைவு செய்தார்.
 
100வது சிறப்பிதழை முன்னிட்டு, தமிழ்த்தேரில் வடம்பிடித்துவரும் படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவுப்பரிசும், பொன்னாடையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை லெ. கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், லட்சுமிநாராயணன், தஞ்சாவூரான், யமுனாலிங்கம் புதுவை ரமணி, பாஃத்திமா ஹமீது, வெற்றிவேல்செழியன், ஆடலரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.