Breaking News
recent

வெளிநாடுகளில் வேலை செய்பவர்களது சோக வாழ்க்கையிலிருந்துது சில......


அவனுக்கென்ன வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை , A/C அறையும் , மாதம் முடிய சம்பளமும் " என்று வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் கஷ்டங்களை அறியாது ஒரு தலைப்பட்சமாக சிந்திப்போருக்கு இப்புகைப்படம் சமர்ப்பணம் !.

குடும்பத்தை கண் முன்னிறுத்தி சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு தமது உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது அதியுயர் கட்டிட உச்சிகளில் பணி புரிபவர்களை பார்த்து "உனக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை" என்று பேசுவதற்கு இனிமேலும் நாவு இடம் கொடுக்குமா ?

சொல்லொனாத் துயரங்களை வெளியில் கூற முடியாமல் சகித்துக் கொண்டு , தாய்நாட்டில் இருக்கும் தமது குடும்பங்களுக்கு சந்தோசமாக இருப்பது போன்று மகிழ்வை முகங்களில் மாத்திரம் வெளிப்படுத்தியவர்களாக தினம் தோறும் மன வலிகளோடு எப்பொழுது தான் இந்த இரண்டு வருடங்கள் உருண்டோடும் என்ற ஏக்கத்துடன் காலங்களைக் கடத்தும் இந்த ஜீவன்களைப் பார்த்தா " உனக்கென்ன வெளிநாட்டு பாட்டியப்பா " என்று எவ்வாறு  எவ்வித மனிதமுமின்றி பேச மனம் வருகின்றது ?

கட்டிட வேலையின் பொழுது ஏற்படும் உடற் காயங்களுக்கு மருந்து கட்டிவிட மனைவியோ , பெற்றோர்களோ இல்லாத வாழ்க்கையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை , காரியாலய பணிகள் முடிவுற்று சோர்வடைந்து அறைக்கு வந்ததும் ஆறுதல் கூறவோ , 

அன்பு செலுத்தவோ மனைவியுமில்லை , தாயுமில்லை , இது தான் வெளிநாட்டு வாழ்க்கை . தாமே தமக்குரிய அனைத்து கடமைகளையும் அரைகுறையாக நிறைவேற்றிக் கொண்டு சாபிட்டும் சாப்பிடாமலும் வேலைத் தளங்களுக்கு காலையிலும் ,

 நடுநிசிப் பொழுதுகளிலும் செல்லும் அந்த கஷ்டமான தருணங்களை எவ்வளவு தான் கூறினாலும் பகிர்ந்தாலும் , எழுதினாலும் அவற்றை வர்ணிக்கவே முடியாது , உண்மையில் அவற்றை அனுபவித்தவர்களுக்கே அவற்றின் வடுக்களும் , வலிகளும் விளங்கும் .

தாம் என்ன பாடுபட்டாலும் தமது பெற்றோர் , சகோதர சகோதரிகள் , பிள்ளைகள் , உறவுகள் எவரும் கஷ்ட நிலையை உணரக்கூடாது என்பதற்காக இரவு பகல் பாராது தொடர்ந்து வேலை செய்தாவது பணங்களை அனுப்பி மேற்குறித்த அனைவரையும் சந்தோஷப்படுத்தும் இந்த அப்பாவிகளைப் பார்த்தா " உங்களுக்கென்ன நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் , வெளிநாட்டு ஆட்கள் " என்று வினவ எவ்வாறு உள்ளம் இடம் கொடுக்கின்றதோ தெரியவில்லை .

குடும்பத்தினர் பஞ்சவர்ண மெத்தைகளில் நிம்மதியாக தூங்கும் அதே வேளையில் இங்கு வெளிநாட்டில் காற்களைக் கூட சுயமாக நீட்டுவதற்கும் இடமில்லாது வெற்று நிலத்தில் குளிரையும் சூட்டையும் தாங்கிய வண்ணம் தூக்கமின்றி அவதிப்படும் இந்த ஜீவன்களை நினைத்துப் பார்ப்பவர்கள் எவராவது உள்ளனரா ?

 . வெளிநாடு என்றதும் எம்மில் அனேகமானவர்களின் சிந்தனைக்கு வருவது பணம் பணம் பணம் தான் . குறைந்த எண்ணிக்கையானவர்களைத் தவிர ஏனையோர் , வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்துவிட்டால் அவரிடம் எங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கிறீர்  , எங்களைக் கவனிக்க மாட்டீரா என்று தான் வாய் கூசாமல் கேட்பர் ! . 

குறைந்தளவாவது உங்களது வேலை எப்படியிருந்தது ,நல்லமா என்று கேட்காது தன்னைக் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கேள்வி எழுப்பும் ஜீவன்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர் .

மன ஆறுதலுக்காக தாய்நாட்டிற்கு வந்தால் வெளிநாட்டில் ஏற்பட்ட வலிகளை விட அதிக வலிகளை ஏற்படுத்தி மனதை அவ்வாறே சுக்குநூறாக உடைத்து விடுகின்றனர்.

தாம் ஒரு இனிப்புத் துண்டும் சாப்பிடாது  , ருசித்துக் கூட பார்க்காது தாய்நாடிற்கு செல்வோரை அணுகி வெளிநாட்டு இனிப்புப் பண்டங்களை பொதி செய்து அனுப்பியதும் , அங்கு குடும்பத்தார் ருசித்து சாப்பிட்ட பின் எங்களுக்கு குறைவாக அனுப்பி விட்டீர்கள் , 

திரும்பவும் அனுப்புங்கள் என்று குறைகள்  நிறைந்த குற்ற வார்த்தை சொல்வதும் அனுப்பியதற்கு நன்றி கூறாது வெளிநாட்டில் உள்ளவர்களை வார்த்தைகளால் சர்வ சாதாரணமாக நோகடிப்பதும் வழமையாகிவிட்டது . வெளிநாட்டில் பணி புரிவோரும் நமது குடும்பம் தானே என்று இந்த குற்ற வார்த்தைகளைப் பொருட்படுத்தாது மீண்டும்  தமது வேலைகளைத் தொடர வழமைக்குத் திரும்புவர்  .

இவ்வாறு வார்த்தைகளினால் , எழுத்துக்களினால்   வர்ணிக்க முடியாத பல அவலங்களும் சோகங்களும் நிறைந்ததே இந்த வெளிநாட்டு வாழ்க்கை .

வெளிநாடுகளில்  வேலை செய்வோரது தொழில்களிலும் , செல்வங்களிலும் இறைவன் பரகத் செய்வதோடு அவர்களுக்கு தேக ஆரோக்கியத்துடன் கூடிய மன வலிமையையும் கொடுத்தருள்வானாக ! ஆமீன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.