Breaking News
recent

ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ !


உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலை தளங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும். இந்த சமூக வலைதளங்கள் அவ்வப்போது இணைய பயனீட்டாளர்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இப்பொழுது ஃபேஸ் புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் ஃபேஸ்புக் லைவ் வீடியோ என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வசதியை முதலாவதாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்தும்படி ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அவர்கள் மூலம் இதனை இணைய பயனீட்டாளர்களிடையே பிரபலப்படுத்தி அதன் பிறகு அனைத்து பயனீட்டாளர்களும் பயன்படுத்தும்படி ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதியை உலகம் முழுவதும் உள்ள 60 நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதியை ஃபேஸ்புகின் மெசெஞ்சர் ஆப் மூலமே பயன்படுத்தமுடியும். இதனை பயன்படுத்த மெசஞ்சர் ஆப்பில் உள்ள நோட்டிஃபிகேஸன் பட்டனை அழுத்த வேண்டும் அப்பொழுது அதில் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் என்னும் வசதி வரும் அதனை அழுத்துவதின் மூலம் ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதிக்குள் நுழைய முடியும்.  

லைவ் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதனை பார்பவர்கள் ஃபேஸ்புக்கின் மத்த போஸ்ட்களுக்கு விருப்பம், விருப்பமில்லை, போன்ற இமோஜிகளை பயன்படுத்துவது போல இதற்கும் பயன்படுத்தலாம்.

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள லைவ் வீடியோ வசதி அதன் பயனீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.