Breaking News
recent

முழு உலக மக்களுக்கென்று முதன் முதலாக அமைக்கப்பட்ட இறை இல்லம்.!


ஒவ்வொரு விநாடியும் இடைவிடாது தரிசிக்கப்பட்டு ,  இறை இல்லம்  இந்த கஃபதுல்லாஹ் எனில் மிகையாகாது .

இனம்,  மொழி , பிரதேசம் , நிறம், கோத்திரம் , தேசியம் போன்ற அனைத்து வர்க்க வேறுபாடுகளுமின்றி இஸ்லாம் என்ற ஓர் இறை மார்க்கம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடம் இந்த கஃபா ஷரீப் தான் .  

இங்கு வருபவர்களை மீண்டும் தம் பக்கம் ஈர்த்தெடுக்கும் தன்மை கொண்டதே இவ் இறைவனின் முதல் பள்ளிவாயல் .
முஸ்லிம்கள் உலகில் எங்கிருந்தாலும் தமது தொழுகைகளில் இதன் பக்கம் திரும்ப வேண்டும் என பணிக்கப்பட்ட ஓர் கடமையை பறைசாற்றும் அழகிய இறை இல்லம் .

இங்கு செல்பவர்கள் அச்சமற்று நிம்மதியாக இருப்பதற்கென சிறப்பாக்கப்பட்ட இறை ஆலயம் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதன் கண்ணியத்தையொட்டி இங்கு பாவ காரியங்கள் செய்வது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன .

பல நபிமார்கள் , நல்லடியார்களின் பாதங்கள் முத்தமிட்ட சிறந்ததொரு இடம் . இப்ராஹீ (அலை ) அவர்களது குடும்பத்தின் சொல்லொனாத் தியாகங்களை இன்றும் என்றும் சான்று பகரும் இடம் கஃபா என்றால் மறுப்பதற்கில்லை .

ஹஜருல் அஸ்வத் , மகாமு இப்ராஹீம் எனும் இப்ராஹீம் (அலை ) அவர்களது காற்கள் பதிந்த இடம் , ஸம் ஸம் கிணறு , ஹிஜ்ரு இஸ்மாயீல் போன்ற இன்னோரன்ன வரலாற்றோடு தொடர்பான அதிமுக்கிய இடங்களை தன்னகத்தே கொண்ட ஓர் கண்ணைக் கவரும் அருள் பொருந்திய மாளிகை கஃபா ஷரீப் என்றால் மிகையாகாது 

.பார்ப்பவர்களுக்கு ரஹ்மத்தாகவும் , இறை அருள் நிறைந்து காணப்படும் இறை வீடாகவும் , பிரார்த்தனைகள் ஏற்கப்படும் அழகிய ரம்மியமான இடமாகவும் விளங்குவது இதன் சிறப்பம்சத்தை படம்பிடித்துக் காட்டுகின்றன.

இங்கு சென்று உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்றக் கிடைத்தவர்கள் அரும் பாக்கியசாலிகள் அத்தோடு  இறைவனின் பேற்றைப் பெற்றவர்கள் . 

சொத்து செல்வமும் , உடல் ஆரோக்கியமிருந்து ஹஜ் கடமையை நிறை வேற்றாதவர் யூதனாக மரணிக்கட்டும் என நபியவர்கள் கண்டித்து ஆர்வமூட்டிய , இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவதற்கு உரிய களமாக இருக்கும் ஒரே ஒரு மாளிகை வசீகரமான இந்த கஃபா ஆலயமே .

புனிதஸ்தளங்களில் மூன்றில் ஒன்றாக விளங்குவதோடு , ஏனை பள்ளிவாயல்களில் தொழுகை நிலை நாட்டப்படும் பொழுது கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகளை ஈட்டித்தரும் பேற்றைப் பெற்ற புனிதங்கள் பூத்துக் குழுங்கும்  உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அழகிய மாளிகை இப்புனித கஃபா ஷரீப் தான் .

இவ்வளவு சிறப்புமிக்க இந்த புனித இடத்திற்கு வருகை தந்து  ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் பாக்கியத்தை எமக்கும் முழு முஸ்லிம்களுக்கும் வல்லவன் அல்லாஹ்  அருள்வானாக ! ஆமீன்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.