Breaking News
recent

வெளிநாடு வாழ் தமிழர்களிடம் பேஸ்புக், ஸ்கைப் மூலம் வலைவீச்சு.!


தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக  மலேசியா  மற்றும்  வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்களை பிரிந்து உழைக்கும்  தொழிலாளர்கள்.

அதிகளவில் ராமநாதபுரம், சிவகங்கை,  தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி பெரம்பலூர் மற்றும் பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்தோர் உள்ளனர். 

வாக்களிக்கும் உரிமை  செயல்படுத்தப்பட்டு நமக்கு இந்த சட்டபேரவை தேர்தலில் வாக்களிக்க  வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர் வெளிநாட்டு வாழ் தமிழர்கள். ஆனாலும் இம்முறையும் ஏமாற்றமே கிடைத்தது. இன்னும் இச்சட்டம்  நடைமுறைபடுத்தபடவில்லை. 

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு வாக்களிக்கும்  வாய்ப்பு கிடைத்திருக்குமானால் தமிழகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட  தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்திகளாக   உருவாகியிருப்பார்கள். தற்போது தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம்  நடைபெற்று வரும் 


நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் வெளிநாட்டு வாழ்  தமிழர்களின் குடும்ப ஓட்டுக்களை பெறும் முயற்சியாக பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு வசதிகளின் மூலம்  வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை தொடர்பு கொண்டு தங்களின் கட்சிகள் சார்ந்த  கூட்டணிக்கு ஆதரவளிக்க குடும்பத்தினரை வலியுறுத்துமாறு ஆதரவு  கேட்கின்றனர். அதோடு வெளிநாடுகளில் உள்ள தங்களது கட்சிகாரர்கள் மூலமும்  வெளிநாட்டு வாழ் தமிழர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்துகின்றனர். 
 
இதில்  தமிழகத்தில் ஒரு குடும்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப  உறுப்பினர்கள் இருந்து அதன் குடும்ப தலைவராக வெளிநாட்டில் இருப்பவர்  இத்தேர்தலில் வாக்களிக்க தமிழகம்  சென்று வர விமான டிக்கெட் இலவசம் எனவும்,  செல்போன்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்து தருகிறோம், என பல்வேறு  வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். 


உடனடியாக இலவசமாக செல்போன் ரீசார்ஜும்  செய்து தருகின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான வெளிநாட்டு வாழ்  தமிழர்களின் குடும்ப ஓட்டுக்களை பெறலாம் என்ற தேர்தல் கணக்கோடு குறிப்பிட்ட  தமிழக அரசியல் கட்சிகள் ரகசியமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.