Breaking News
recent

மனித உரிமைகள் என்ற தலைப்பில் போட்டி, பார்வையற்ற பலஸ்தீன மாணவி முதலிடம்.!


UNRWA நடத்தும் பள்ளிகளுக்கு இடையே நடந்த மனித உரிமைகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் பாலஸ்தீன காஸாவை சேர்ந்த பார்வையற்ற 13 வயது மாணவி யாஸ்மின் அல்-நஜ்ஜார் முதல் இடம் பெற்றார்.

இதை பற்றி யாஸ்மின் கூறும்போது,

நான் வெற்றி பெற்றதை அறிந்து எனது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த போட்டிக்காக ஒரு வாரம் நன்றாக படித்து தயார் ஆகினேன், எனக்கு மிகவும் உற்சாகம் அளித்து உதவி புரிந்தது எனது ஆசிரியை யாஸ்மின்எனக் கூறினார்.

மாணவியின் ஆசிரியை கூறும்போது ,

யாஸ்மின் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள மாணவி.ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். பிறகு நான் நன்கு உற்சாகம் அளித்து தேவையான உதவிகளை செய்து வந்தேன். யாஸ்மின் வெற்றி பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் பார்வையற்ற மாணவர்களில் 13 வயது யாசர் அல்-அர்ஜா மற்றும் 12 வயது மர்யம் அபு சுவைஸ் வெற்றி பெற்றுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.