Breaking News
recent

தேர்தலுக்கு பின்னர் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’.!


சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ மக்களுக்கு வழங்கப்படும் என்று பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் ‘ஏடிஎம்’ கார்டு வடிவிலான ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ மக்களுக்கு வழங்கப்படும் என்று பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் கூறினர்.
இத்திட்டத்திற்காக, குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலமாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது போன்ற பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
இதனால் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கவும், உண்மையான பயனாளிகள் பயனடையவும் முடியும். மேலும், இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், புதிய ரேஷன் கார்டு கேட்டு இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து, 15 நாளில் புதிய அட்டை பெற முடியும்.
இது குறித்துள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இணைய தள வசதியுடன் கூடிய கணினி இயந்திரம் வழங்கப்படும். இதற்கென தனி ‘ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இது மூலமாக தனது கார்டுக்கு என்ன பொருள் பெற வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் உள்ள பொருளின் இருப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.