Breaking News
recent

துப்பரவு தொழிலாளியை கட்டி தழுவி சமத்துவத்தை நடை முறை படுத்தும் முஸ்லிம்கள் (வீடியோ இணைப்பு)


அரபு வலை தளங்களில் இன்று பரவலாக பகிரபட்டும் விரும்ப பட்டும் வருகின்ற ஒரு அழகிய செயலை விளக்கும் வீடியோவை தான் உங்கள் முன் வைத்திருக்கிறேன்


இந்திய சமூகத்தில் கிடைப்பதற்கு அரிய ஒரு விசயம் சமத்துவம் 

இந்த சமுத்துவம் இஸ்லாத்தின் ஒவ்வொரு நடை முறைகளிலும் எதிரொலிப்பதை பார்க்க முடியும்


அப்படி பட்ட அழகான ஒரு நிகழ்வை தான் நாம் வெளியிட்டுள்ள வீடியோ விளக்குகிறது
நிகழ்விடம் சவுதி அரேபியா

ஆம் பங்களாதேஷை சார்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் மக்ரிப் தொழுகைக்காக பள்ளி வாசல் வந்தான் அவன் நகர சபையில் துப்பரவு தொழிலாளியாக பணியாற்றகுடியவன்

தொழுகையை முடித்து பள்ளியின் வெளியில் வரும் வேளை அவனது கைபேசி ஒலிக்கிறது அழைப்பை ஏற்று கொண்டு பேசியவனின் முகத்தில் சோகம் சூழ்நதது அவனது தந்தை பங்களாதேஷில் இறந்து விட்ட செய்தி அவனுக்கு சொல்ல பட்டது

வாய்விட்டு அழுது விட்டான் அருகில் வந்தவர்கள் என்னவென்று விசாரித்த போது அவனது தந்தை இறந்த செய்தி வந்திருப்பதை சொல்லி அழுதான்

உடனே அவனை மீண்டும் பள்ளிவாசலினுள் அழைத்து சென்று அங்கு இருந்தவர்களுக்கு அந்த செய்தியை கூறி அவனது தந்தைக்காக பிரார்த்திக்க வேண்டினர்

அத்தோடு அங்கிருந்த சவுதி நாட்டவர் உட்பட ஒவ்வொரு வரும் அவனை கட்டி தழுவி அவனுக்கு ஆறுதல் கூறினர்

மார்க்கம் அனுமதித்த எந்த வேலையை செய்தாலும் முஸ்லிம்களிடையே பேதம் இல்லை அவர்கள் ஒரு தாய்பிள்ளைகளை போன்று சமத்துவத்தில சமமானவர்களே

இஸ்லாம் சமத்துவத்தை சொல்லால் அல்ல செயலால் பதிவு செய்யும் மார்க்கம் என்பதை விளக்கும் அழகிய சான்றுகளில் ஒன்றாக இந்த வீடியோ காட்சி தருகிறது
வீடியோ 
https://www.facebook.com/593891087409031/videos/784760581655413/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.