Breaking News
recent

சவுதிக்கு வேலைக்கு சென்று படாதபாடு படும் இந்தியர்களின் பரிதாபத்தை கூறும் புத்தகம்.!


சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் தங்களின் முதலாளிகளால் படும் அவஸ்தை குறித்து புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. 

வுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் அவர்களின் முதலாளிகளால் படும் துன்பங்கள் குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றது. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

ஜார்க்கண்டை சேர்ந்த 25 வயது பெண்ணின் கணவர் சவுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் தனது முதலாளியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்க்க அந்த பெண் ஓராண்டு காலமாக காத்துள்ளார். 

சவுதியில் இந்தியர்கள் படும் அவதி குறித்து பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளரான ஜாய் சி. ரபேல் புத்தம் ஒன்றை எழுதியுள்ளார். Sour and Sweet: Expat Stories from Arabia என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சவுதியில் அரபிகளால் இந்திய தொழிலாளர்கள் படும் அவஸ்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா, அமீரகம், ஓமன், குவைத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இந்தியர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு முதலாளிகளால் கொடுமைப்படுத்தப்படுவதை அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஜாய். கேரளாவை சேர்ந்த ஜாய் ரியாத்தில் பத்திரிக்கையாளராக இருந்தவர். 

கடப்பாவை சேர்ந்த ராணி சவுதிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் முதலாளி மற்றும் அவரது மகனால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சம்பளமும் அளிக்காமல் இருந்துள்ளனர். 

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி வேறு ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த விபரம் ஜாயின் புத்தகத்தில் உள்ளது. குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று வியக்கும் அளவுக்கு அந்த புத்தகத்தில் தகவல் உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.