Breaking News
recent

ஈரான் பயணிகள் விமானங்கள் பறக்க சவூதி அரேபியா தடை.!



ஈரானின் மாஹான் ஏர் நிறுவன விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சவூதி அரேபிய விமானப் போக்குவரத்து அமைப்பின் அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

 ஈரான் நாட்டைச் சேர்ந்த மாஹான் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் சவூதி அரேபிய விமான நிலையங்களில் தரையிறங்கவும், சவூதி அரேபிய வான் எல்லையில் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச விமானங்களுக்கான சவூதி அரேபியாவின் விதிமுறைகளை மாஹான் ஏர் பின்பற்றத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.