Breaking News
recent

இஸ்லாமிய கைதிகள் விடுதலை; மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை.!


மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
 • ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டணி அரசு அமைக்கப்படும்.
 • அதிமுக திமுக உண்மையான மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை தேமுதிக – மநகூ- தமாகா ஆட்சி வழங்கும்.
 • விவசாய கடன்கள் உடனே ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் திட்டம் உருவாக்கப்படும்.
 • வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
 • அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
 • வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை.
 • லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும்.
 • உலக வர்த்தக ஒப்பந்தம், உள்நாட்டுத் தொழில்களை நாசப்படுத்துகிறது. மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் நலக் கூட்டணி எதிர்க்கும்.
 • தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டத் திருத்தம்.
 • உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை கட்டாயமாக்கப்படும்.
 • கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.
 • சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கபட்டுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும்.
 • பட்டியலினத்தோர் துணைத்திட்ட நிதியில், சிறப்பு கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
 • மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.
 • கல்லூரி, வேலை வாய்ப்பில் 25 மரம் நட்டு பராமரிப்பவர்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
 • அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படும்.
 • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் இலவசம்.
 • காவேரி டெல்ட்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
 • தமிழ் ஆய்வுக்க உலக நாட்டு பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துவோம்.
 • வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் அமைக்கப்படும்.
 • பொதுக் கணக்குக் குழு அமைத்து அரசு திட்டங்களை மக்கள் கண்காணிக்க ஏற்பாடு.
 • மக்கள் பிரச்சனைகளை துணிவோடு வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு அங்கீகாரம்.
 • முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும். சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
 • மக்களை நாடி அரசு என்ற வகையில், அரசு நிர்வாகத்தில் மாற்றம்.
 • அரசு விழாக்கள், கட்சி சார்பற்ற விழாக்களாக நடக்க விதி வகுப்போம்.
 • நெறிமுறைக் குழு அமைத்து, பல்துறை அறிஞர்கள் கண்கானிப்புடன் கூடிய கூட்டணி அரசு அமைப்போம்.
 • உண்மையான மக்கள் நல அரசை ஏற்படுத்துவோம், கார்ப்பரேட் சேவகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
 • சிறு தொழில் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படும்.
 • மாணவர்களின் கடன் தள்ளுபடி.
 • பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.
 • மாணவர்களுக்கான தனி பேருந்துகள்.
 • இலவசமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கப்படும்.
 • மீனவர் நலன் பாதுகாக்கப்படும்.
 • வணிகர்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி எளிமையான முறையில் உரிமம் வழங்கப்படும்.
 • இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்.
 • மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்
 • சில்லறை வணிகர் நலன் காக்கப்படும்.
 • மதம் மாறிய இஸ்லாமியரை பிற்படுத்த பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கப்படும்.
 • மகளிர் சுய உதவி கடனை அரசே செலுத்தும்.
 • திருநங்கைகளுக்கு தனி வாரியம், பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள்
 • அனைத்து அலுவலகங்களிலும் அம்பேத்கர் படம்
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல சிகிச்சை
 • மின்னணு கழிவுகள் மேலாண்மை
 • படித்த இளைஞர்களுக்கு டேட்டா பேஸ்.
 • மரம் நடுதல் பேரியக்கம்.
 • ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற்றம்.
 • குளிர்பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சுதல் தடுக்கப்படும்.
 • சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு
 • மாவட்டம் தோறும் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகள்
 • கல்விக்கடன்கள் உதவித்தொகைகளை அரசே செலுத்தும்
 • தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டப்படும்.
 • ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நல் உறவு பராமரிக்கப்படும்.
 • மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டுப் பத்திரம்.
 • பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
 • பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ, வட்டியில்லா கடனில் வாகன வசதி.
 • இரு மாதங்களுக்கு ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பு.
 • சட்டமன்ற நடவடிக்கைகள் இணையத்தில் பதியப்படும்.
 • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடுகள் இன்றி வழிபடும் உரிமை நிலை நாட்டப்படும்.
 • பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படும்.
 • மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் அவலம் ஒழிக்கப்படும்.
 • மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டங்கள்
 • அனைத்துப் பழங்குடியினருக்கும் சாதிச் சான்றிதழ்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.