Breaking News
recent

யார் இந்த அசத்துத்தின் உவைஸி...? அவரை நேசிப்பதற்கு காரணம் என்ன..??


தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தீன் உவைஸி அவர்களை அகில இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள் நேசிப்பதற்கு அவருடைய அரசியல் பயணத்தில் சமுதாயத்தை முன்னேற்றும் லட்சியமே முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கடந்த நிதியாண்டில் ஒதுக்கிய தொகை ரூ 104 கோடி,

தெலுங்கானா மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக தெலுங்கானா அரசு கடந்த நிதியாண்டில் ஒதுக்கிய தொகை ரூ 1600 கோடி, இவற்றில் ரூ 400 கோடி மாணவர்களின் கல்விக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதம்,.

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 12 சதவீதம்,

தெலுங்கானாவில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், நீதித்துறையினர், விஞ்ஞானிகள் என்று அரசு பணிகளில் அனைத்து துறையிலும் 100 க்கு 12 பேர் முஸ்லிம்கள் பணிப்புரிகிறார்கள்.

இப்படி தெலுங்கானா மாநிலத்திலுள்ள முஸ்லிம்களை அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், அதிகாரம் என அனைத்து துறையிலும் முஸ்லிம் சமுதாயத்தை ஈடில்லாத வகையில் முன்னேற்றி கொண்டிருப்பவர் அசத்துத்தீன் உவைஸி,

இதே நிலை தெலுங்கானா மாநிலத்தில் நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மற்ற மாநில முஸ்லிம்களை விட தெலுங்கானா மாநில முஸ்லிம்கள் அனைத்து துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள்.

அரசியல் தலைவர் என்றால் தான் மட்டும் முன்னேறாமால் தன் சமுதாயத்தையே முன்னேற்றி விட வேண்டும்.

சமுதாயத்தை முன்னேற்றுவதில் அசத்துத்தீன் உவைஸி மிக சிறப்பாக செயலாற்றுகிறார்.

இதுதான் அவரை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

யார் இந்த அசத்துத்தின் உவைஸி ?

அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி அசத்துத்தின் உவைஸி.

உண்மையிலேயே மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர்.

இவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் மே மாதம் 13ஆம் தேதி 1969ல் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். (இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது).

அஸதுத்தீன் உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்றார். பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கு LLB படித்து வழக்கறிஞரானார்.

இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார்.

இவரை இவருடைய ஆதரவாளர்கள் நகீப்-இ-மில்லத் (சமூகத்தின் தலைவர்) என்று அழைக்கின்றனர்.

1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார்.

2004, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உவைஸி என்பது அவரது குடும்பப்பெயர். அவருடைய பெற்றோர் அசத்துத்தீன் என்ற பெயரை அவருக்கு சூட்டியுள்ளனர்.

அசத் என்றால் சிங்கம் என்று பொருள், தீன் என்றால் மார்க்கம் என்று பொருள்.

அசத்துத்தின் என்றால் மார்க்கத்தின் சிங்கம் என்று பொருள்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது எம்பி-க்களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி நடராஜன் என்ற காங்கிரஸ் எம்.பி 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

ஆனால் அவர் எழுப்பிய கேள்விகள் 135 தான், ஆனால் உவைசி 1042 கேள்விகள் கேட்டு பாராளுமன்றத்தையே கதி கலங்க வைத்திருந்தார்.

இறைவன் மிகப்பெரியவன்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.