Breaking News
recent

இனி பில் கிடைக்காது, செல்போனுக்கு எஸ்எம்எஸ் வரும் ரேஷன் கடைகளுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவிகள்.!


ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும்போது ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் நவீன கையடக்க கருவியில் உள்ளீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்குவதற்கு பதில் எஸ்எம்எஸ் வரும் வகையில் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. 

இதனை தடுக்கவும், பில் போடுவதில் நடைபெறுகின்ற தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையிலும், போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு பாயின்ட் ஆப் சேல் எனப்படும் நவீன கருவிகள் வழங்கப்பட இருக்கிறது. 

மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த கருவிகள் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடு தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு பொருட்கள் வாங்கிய உடன் என்னென்ன பொருட்கள் எந்த அளவில் வாங்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது எஸ்எம்எஸ் வரும் வகையில் இந்த பாயின்ட் ஆப் சேல் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தனியாக பில் வராது. மேலும் ஒருவரது பெயரில் முறைகேடாக பொருட்கள் பதிவு செய்வது தடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வாங்கப்படுவதும் உறுதி செய்யப்படும். எஸ்எம்எஸ் வருகின்ற அதே வேளையில் இருப்பு விபரம் அதிகாரிகளால் கண்காணிக்க முடியும். 


இந்த கருவிகள் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே ரேஷன் கார்டுகளில் உள்ளவர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளன. 

மேலும் ஆதார் எண்களும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பெறப்பட்டுள்ளது. இனி ஆதார் எண் பெற்றவர்களுக்கு மட்டுமே எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பொருட்கள் வழங்கப்படும்’ என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.