Breaking News
recent

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் இஸ்லாம் – சிறப்புக்கட்டுரை.!


கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் திமோதி ஜே வின்டர் அவர்கள் தற்கால இஸ்லாமிய கற்கைக்கு வழங்கிவரும் பணிகள் மகத்தானவை. உலக மக்கள் அனைவரும் நினைத்ததை விட முஸ்லிம்கள் பிரித்தானியாவிற்கு வழங்கிய பங்களிப்புக்கள் மகத்தானவை என்று பிபிசி உலக சேவை சுட்டிக் காட்டியுள்ளது.”

ஐரோப்­பாவில் இஸ்லாம் இன்று மிகவும் வேக­மாகப் பரவி வரு­வதை ஆய்­வுகள் மூலமும், கருத்­துக்­க­ணிப்­புக்­களின் ஊடா­கவும் நாம் அறிந்­து­கொள்­கிறோம். 16 ஆம் நூற்­றாண்டில் முத­லா­வது எலி­சபத் மகா­ரா­ணி­யாரின் ஆட்­சிக்­கா­லத்தில் தேசத்தின் அடை­யா­ளத்தை அறிந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­கி­டைத்­தது.

இந்தக் காலப்­ப­கு­தி­யி­லேயே பிரித்­தா­னி­யாவில் வாழ்ந்த முஸ்­லிம்கள் வெளிப்­ப­டை­யான முறையில் வாழவும், மார்க்க அனுஷ்டானங்­களை பின்­பற்­றவும் ஆரம்­பித்­தார்கள் என்று லண்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் Queen Mary College கல்­லூ­ரியின் வர­லாற்­றுத்­துறை பேரா­சி­ரியர் ஜெரி ப்ரோட்டன் Jerry Brotton தெரி­வித்­துள்ளார்.

வட ஆபி­ரிக்கா, மத்­திய கிழக்கு,மத்­திய ஆசியா போன்ற பிர­தே­சங்கள் பிரித்­தா­னி­யாவில் இருந்து நீண்ட தூரத்தில் அமைந்­தி­ருந்­தாலும் 16ம் நூற்­றாண்டில் லண்டன் நகரில் செறி­வான முறையில் முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­தார்கள்.

கி.பி 1500ம் ஆண்­டு­கா­லத்தில் லண்டன் நகரில் வாழ்ந்த முஸ்­லி­ம்கள் வெளி­நாட்­டுத்­தூ­து­வர்­க­ளா­கவும், வர்த்­த­கர்­க­ளா­கவும்,மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளா­கவும்,இசைக் கலை­ஞர்­க­ளா­கவும் பணி­யாற்­றி­னார்கள் என்று பேரா­சியர் Jerry Brotton அவர்கள் தனது என்று புத்­த­கத்தில் A History of the World in 12 Maps கூறு­கி­றார்கள்.

கத்­தோ­லிக்க ஐரோப்­பாவில் இருந்து 16ம் நூற்­றாண்டு காலத்தில் எலி­சபத் மகா­ரா­ணியார் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டமையால் இங்­கி­லாந்தில் முஸ்­லிம்கள் குடி­யே­று­வ­தற்­கான வாய்ப்புக் கிடைத்­தது.

கத்­தோலிக்க திருச்­ச­பையின் 225வது பாப்­ப­ர­ச­ராக இருந்த பாப்­ப­ர­சர் ஐந்தாம் பயஸ் அவர்கள் Pope Pius V பிரித்­தா­னிய மகா­ர­ாணியார் முதலாம் எலி­ச­பத்தை கி.பி 1570ம் ஆண்­ட­ளவில் திருச்­ச­பையில் இருந்து நீக்­கி­யதைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுடன் பிரித்­தா­னிய கிறிஸ்­த­வர்கள் தொடர்பு வைக்­கக்­கூ­டாது என்று விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­நீங்­கி­யது.

இதனால் பிரித்­தா­னி­யா­வுக்கும் முஸ்லிம் அர­சு­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்ப்­புகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. மொரோக்­கோவின் சாதி ஆட்­சி­யா­ளர்கள், துருக்­கியின் உஸ்­மா­னிய ஆட்­சி­யா­ளர்கள், இதே­போன்று ஈரானின் பேர­ர­சு­டனும் தொடர்­பு­களை மேற்­கொள்­வ­தற்­கான வாய்ப்பு பிரித்­தா­னி­யா­வுக்கு கிடைத்­தது.

முத­லா­வது எலி­ஸபத் மகா­ரா­ணியார் பிரித்­தா­னி­யா­வுக்கும்,முஸ்லிம் உல­கத்­திற்கும் இடை­யி­லான வர்த்­தக,பாது­காப்பு, உற­வு­களை மேம்­ப­டுத்­து­வது பற்றிக் கூடுதல் கவ­னம்­செ­லுத்­தினார். சம­கா­லத்தில் இந்­தியர், நீக்­ரோக்கள்,துருக்­கி­யர்கள் போன்ற இனங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் இலண்டன் நக­ருக்குச் செல்­வதை வழக்­கப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தார்கள்.

முத­லா­வது எலி­சபத் மகா­ரா­ணி­யாரின் ஆட்­சிக்கு அதா­வது கி.பி 1500ம் ஆண்­டு­கா­லப்­ப­கு­திக்கு முன்னர் பிரித்­தா­னி­யாவில் மாத்­திரமல்ல முழு கிறிஸ்­தவ மண்­ட­லமுமே இஸ்­லாத்தை இரத்தம் தோய்ந்த அல்­லது எதிர்த்­த­ரப்­பாகக் கருதி வந்­தது.

சிலுவை வீரர்­க­ளிடம் இருந்து கிடைத்த தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இஸ்­லாத்தை பிரித்­தா­னிய மக்கள் நோக்­கி­யமை இதற்­கான கார­ண­மாகும்.

இங்­கி­லாந்­திலோ பிரித்­தா­னி­யா­விலோ வாழ்ந்த மக்கள் 17ம் நூற்­றாண்டு வரை இஸ்லாம் அல்­லது முஸ்லிம் என்ற சொல்லை அறிந்­தி­ருக்­க­வில்லை என்று பிரித்­தா­னி­யாவின் பேர்­மிங்ஹாம் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாற்­றுத்­துறை மேற்­கொண்ட ஆய்வில் இருந்­து­தெ­ரிய வந்­துள்­ளது. 

முஸ்­லிம்­களைக் குறிக்க அக்­கா­லத்தில் முழு ஐரோப்­பா­விலும் Saracens (ஸரசன்) என்ற சொல்­ப­யன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. ஸரசன் என்ற சொல்லை மத்­தி­ய­கா­லத்­தில வாழ்ந்த ஐரோப்­பி­யர்கள் முஸ்­லிம்­களைக் குறிக்கப் பயன்­ப­டுத்­தி­னார்கள்.

நபி இப்­றாஹிம் அலை­ஹிஸ்ஸலாம் அவர்­களின் காலம் வரை­யான வர­லாற்­றைக்­கொண்ட பாரம்­ப­ரியக் கோத்­திரம் என்­பது என்ற சொல்­லுக்­கு­ரிய அர்த்­த­மாகும். பிரித்­தா­னி­யாவில் வாழ்ந்த மக்களுக்கு இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொள்­வது என்ற விஷயம் இல­கு­வா­ன­தாக இருக்­க­வில்லை. 

முஸ்லிம்கள் தொடர்பில் ஊட்­டப்­பட்ட கருத்­துக்கள் இதற்­கான கார­ண­மாக இருக்­கலாம் என்­பது நவீன வர­லாற்று ஆசி­ரி­யர்­களின் கருத்­தாகும். ஆனால் முத­லா­வது எலி­சபத் மகா­ரா­ணி­யாரின் ஆட்­சிக்­கா­லத்தில் இந்த நிலை மாற்றம் கண்­டது.

கி.பி 1562ம் ஆண்டில் முதலாம் எலி­சபத் அவர்­களின் வர்த்­தகத் தூதுக்­குழு பார­சீ­கத்தை ஆட்­சி­செய்த முத­லா­வது ஷா தஹ்­மஸாப் மன்­னரின் அர­ச­ச­பையை சென்­ற­டைந்­தது. இந்த குழுவில் பக்­கிங்ஹாம் மாளி­கையின் அறி­ஞர்கள் குழுவும் இடம்­பெற்­றி­ருந்­தார்கள். 

ஷீ ஆ சுன்னா வேறு­பா­டுகள் உட்­பட பல­வி­ட­யங்­களை அவர்கள் மகா­ரா­ணி­யா­ரிடம் சமர்ப்­பித்­தார்கள். இவர்­க­ளுடன் அவ்ரா சுல்­தான் என்ற இளம் முஸ்­லிம்­பெண்ணும் அனுப்­பப்­பட்­டி­ருந்தார்.

அவ்ரா சுல்­தான் என்ற முஸ்லிம் பெண் முத­லா­வது எலி­சபத் மகா­ரா­ணி­யாரின் அன்­புக்­கு­ரி­ய­வ­ராக மாறினார். குர­ன­டாவின் பட்­டுத்­து­ணி­க­ளையும் ஸ்பெய்ன் நாட்டின் கால­ணிக­ளையும் அறி­முகம் செய்தார் என்று பிபிசி உலக சேவையின் கலா­சா­ரப்­பி­ரிவு மேற்­கொண்ட ஆய்வில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

முதலாம் எலி­சபத் மகா­ரா­ணி­யாரின் காலத்தில் கடற்­ப­டைத்­த­ள­ப­தி­யான வைஸ் அட்­மிரல் 1586ம் ஆண்டு காலத்தில் மத்­தி­ய­த­ரைக்­கடல் அமைந்­துள்ள பிர­தே­சத்தில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது வெற்­றி­பெற்று கைதி­க­ளாக அழைத்­து­வந்­த­வர்­க­ளில் ஒருமுஸ்லிமும் இடம்­பெற்­றி­ருந்தார். 

1597ம் ஆண்­டு­கா­லத்தில் லண்டன் நகரில் வாழ்ந்த மொரோக்கோ நாட்­டவர் ஒருவர் உயி­ரி­ழந்த போது திருச்­ச­பையின் தலை­யீடு இன்றி அவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டார். 

அவர் எந்த மதத்தைச் சேர்ந்­தவர் என்ற தகவல் கிடைக்­காமை இதற்­கான கார­ண­மாகும். ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்ற விடயம் பிற்­கா­லத்­தி­லேயே தெரி­ய­வந்­துள்­ளது.

1575ம் ஆண்டு காலத்தில் புகழ்­பெற்ற வர்த்­த­க­ரான சம்சன் ரூவ்லி அவர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் வட­ஆ­பி­ரிக்­கா­விற்கு விஜயம் செய்து இஸ்­லாத்தை அறிந்­து­கொள்ள விரும்­பி­னார்கள். இதில் பலர் இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொண்­டார்கள்.

உஸ்­மா­னிய கிலா­பத்தின் அல்­ஜீ­ரியப் பிராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான ஆளு­ன­ராக இருந்த ஹைருத்தீன் பர்­ப­ரோ­சுடைய திறை­சே­ரியின் செய­லா­ள­ராக ஹசன் அகா என்­பவர் நிய­மிக்­கப்­பட்டார். 

ரோஸ் என்ற பெய­ரு­டைய இவர் இஸ்­லாத்தை ஏற்றுக்கொண்­டதன் பின்னர் தனது பெயரை ஹசன் அகா என்று மாற்­றிக்­கொண்டார். ஹைருத்தீன் பர்­ப­ரோ­ஸு­டைய நம்­பிக்கைக்குரிய ஆலோ­ச­க­ரா­கவும் அவர் திகழ்ந்தார். 

பார­சீகம், துருக்கி, மொரோக்கோ ஆகிய இடங்­களில் இருந்து அதிகம் முஸ்­லிம்கள் பிரித்­தா­னிய மகா­ரா­ணி­யாரால் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்கள்.

மொரோக்­கோவில் மெவ்லாய் இத்ரீஸ் மன்­னர்­களின் ஆட்­சி­ந­டந்த காலத்தில் பிரித்­தா­னி­யா­விற்­கான முத­லா­வது தூது­வ­ராக அஹமத் பில்­காஸிம் அவர்கள் 1589ம் ஆண்டில் நிய­மிக்­கப்­பட்­டார்கள்.

 பிரித்­தா­னி­யாவைக் கைப்­பற்­று­வ­தற்­கான முயற்­சி­களை ஸ்பெய்ன் மன்னர் ஆரம்­பித்த போது முஸ்­லிம்­களே பிரி­த்தா­னி­யாவைப் பாது­காத்­தார்கள். மொரோக்­கோவின் மன்னர் மௌலாய் அஹமத் அல் மன்சூர் அவர்­களே பாது­காத்­தார்கள்.

பத்­து­வ­ரு­டங்­களின் பின்னர் முஹம்­மத அல் அன்­னூரி அவர்கள் லண்டன் நக­ருக்­கான பிரித்­தா­னியத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். மத்­திய லண்­டன் நகரில் மொரோக்­கோவின் தூத­ரகம் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எலிஸபத் மகா­ரா­ணி­யாரை தூதுவர் முஹம்மத் அல் நூரி இரண்டு தட­வைகள் சந்­தித்­தார்கள் இதன் போது ஸ்பெய்­னிடம் இருந்து தமது நாட்­டையும் கால­னி­க­ளையும் பாது­காக்க முஸ்­லிம்கள் உத­வ­வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்­வைத்தார்கள்.

முதலாம் எலி­சபத் மகா­ரா­ணியார் முஸ்லிம்களே பிரி­த்தா­னி­யாவின் பாது­காப்பை உறு­தி­செய்ய உகந்­த­வர்கள் என்று நம்­பினார் கி.பி 1000ம் ஆண்டு முதல் 1291ம் ஆண்டு வரை­யி­லான காலத்தில் வாழ்ந்த பிரித்­தா­னி­யாவின் சிலுவை வீரர்கள் இஸ்லாமிய அரபுச் சொற்­களை அறி­முகம் செய்­துள்­ளார்கள்.

அரபு சொற்­களும் ஆங்­கி­லத்­துடன் இந்­த­கா­லத்­தி­லேயே கலந்­த­தாக பேர்­மிங்ஹாம் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாற்று ஆசி­ரி­யர்கள் கூறு­கி­றார்கள். 1636ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் அரபுக் கற்கைக்கான இருக்கை அமைக்­கப்­பட்­ட­தோடு வில்­லியம் லோர்ட் அவர்கள் அதன் தலை­வ­ராக இருந்­தார்கள்.

பிரித்தானியாவின் சட்டத்துறை நிபுணரும், கீழைத்தேய ஆய்வாளருமான ஜோர்ஜ் சேல் அவர்களால் முதலில் அல்குர்ஆனை1734ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

பிரித்தானியப் பாராளுமன்றத்தின் House of Lords என்று அழைக்கப்படும் பிரபுக்கள் சபையின் ஸ்டான்லி பிரபு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

1935ம் ஆண்டில் பிபிசி உலகசேவை முதலில் அல்குர்ஆன் ஓதலை ஒலிபரப்பியது. 1997ம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற முஹம்மத் சர்வார் அல்குர்ஆனை முன்வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திமோதி ஜே வின்டர் அவர்கள் தற்கால இஸ்லாமிய கற்கைக்கு வழங்கிவரும் பணிகள் மகத்தானவை.

உலக மக்கள் அனைவரும் நினைத்ததை விட முஸ்லிம்கள் பிரித்தானியாவிற்கு வழங்கிய பங்களிப்புக்கள் மகத்தானவை என்று பிபிசி உலக சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.