Breaking News
recent

ஒபாமாவை கண்டுகொள்ளாத சல்மான் - அமெரிக்காவை நம்பி சவூதி அரேபியா இல்லை.!

வளைகுடா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வியாழன் -21- அன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி தலை நகர் ரியாத் வருகை தந்தார்.

அமெரிக்க அதிபர் அரசுமுறை பயணமாக வெளிநாடுகள் செல்லும் போது எந்த நாட்டிர்கு செல்கிறாரோ அந்த நாட்டின் அதிபரோ பிரதமரோ மன்னரோ தான் அவரை வரவேற்ப்பது வழக்கம்.

உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரை வரவேற்பது என்றால் இந்தியாவின் பிரதமராக பணியாற்றும் மோடி போன்றவர்கள் போட்டி போட்டு கொண்டு விமான நிலையம் ஓடுவார்கள்.

ஆனால் கடந்த வியாழன் அன்று ஒபாமா ரியாத் வந்த போது அவரை வரவேற்க்க சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வருகை தரவில்லை. மாறாக தனது பிரதிநிதியாக ரியாத் ஆளுநரை சல்மான் அனுப்பி வைத்தார்.

சல்மானின் இந்த செயல் அமெரிக்க பத்திரிகைகளில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வந்து ஒபாமாவை வரவேற்க்க மறுத்ததின் மூலம் அமெரிக்காவையும் ஒபாமாவையும் சல்மான் அவமதித்து விட்டார் என்றும்  அமெரிக்காவை நம்பி சவுதி இல்லை என்ற தகவலை இதன் மூலம் வாஷிங்டெனுக்கு சல்மான் தெரிவித்துள்ளார் என்று  நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கூறியுள்ளது.

ஈரானோடு அமெரிக்க அண்மையில் காட்டிய நெருக்கமும் சிரியா இராக் விசயங்களில் அமெரிக்க எடுக்கும் உறுதியற்ற நிலைபாடுகளுமே சல்மானின் கோபத்திற்கு காரணமாகும் எனவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.