Breaking News
recent

துருக்கியில் இஸ்லாமிய சார்பு, அரசியலமைப்பு வருகிறது..?


துருக்கி ஒரு முஸ்லிம் நாடு என்பதால் அதன் புதிய அரசியலமைப்பில் மதச்சார்பின்மையை நீக்க வேண்டும் என்று ஆளும் ஏ.கே. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். 

அரசியலமைப்பு வரைபை மேற்பார்வையிடுபவரான சபாநாயகர் இஸ்மைல் கஹ்ராமான், மதச்சார்பான அரசிலமைப்போன்று வரையப்பட வேண்டும் என்று செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மதச்சார்பின்மை பெறுமானங்களை அகற்றுவது குறித்து ஏ.கே. கட்சி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று அரசியலமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

1920களில் இருந்து துருக்கி அரசியலமைப்பில் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஆளும் ஏ.கே. கட்சி நாட்டில் இஸ்லாமிய நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடசாலைகள் 

மற்றும் சிவில் சேவைகளில் பெண்கள் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடையை அகற்றிய அரசு மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்ததோடு பல்கலைக்கழகங்களில் கலப்பு பாலின தங்குமிடங்களுக்கும் தடைவிதித்தது.

ஏ.கே. கட்சி பாராளுமன்றத்தில் 550 ஆசனங்களில் 317 இடங்களை பெற்றுள்ளது. அரசியலமைப்பு வரைபு மீது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல 330 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஏனைய கட்சிகளினதும் ஆதரவை பெற ஏ.கே. கட்சி ஏதிர்பார்த்துள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.