Breaking News
recent

இஸ்ரேலை அங்கீகரித்த சவூதி, தூதுவரும் நியமனம், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலத்தில் தூதரகம் திறப்பு.!


சவூதி அரேபியா தலைமையிலான மத்திய கிழக்கின்; எல்லா அரசுகளும் இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைக் கொண்டுள்ளன. தற்போது சவூதி அரோபியா ஒரு படி வெளிப்படையாக முன்னேறி இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியுள்ளது.

படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு. ஏமாற்று வேலைகள், அநீதியான செயற்பாடுகள் மற்றும் இதர வன்முறைகள் மூலம் பலஸ்தீனர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பூமியில் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படைகளை முற்று முழுதாக மீறும் வகையில் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். 

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாகச் சேர்ந்து செய்த சதியின் விளைவாகத் தான் இது சாத்தியமாயிற்று. மத்திய கிழக்கு நாடுகளின் வளங்களை சூறையாடி, அமைதியை குலைத்து அந்த மக்களை கொன்று குவிக்கும் நோக்கில் அந்தப் பிராந்தியத்துக்குள் உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல். கடந்த பல தசாப்தங்களாக இந்தப் பணி அங்கு செவ்வனே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

பழங்குடி இனவாத சவூதி அரசு உலகில் முஸ்லிம் நாடுகளுக்கு ஒரு முகத்தையும் கிறிஸ்தவ உலகுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருகின்றது. 

இந்த அரசு ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலம் நகரில் தற்போது தூதுவர்களின் தங்குமிடம் என்ற போர்வையில் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளது. 

மக்கா மதீனா ஆகிய இரண்டு புனித ஸ்தலங்களி;னதும் காவலர் என தன்னை அழைத்துக் கொள்ளும் சவூதி அரேபியாவின் உரிமையாளரான மன்னர் சல்மான் தனக்கு மிகவும் விசுவாசமான, அமெரிக்கர்களை விட அமெரிக்காவுக்கு ஆதரவான, யூதர்களை விட இஸ்ரேலுக்கு ஆதரவான அல் வலீத் பின் தலால் என்பவரை இஸ்ரேலுக்கான சவூதியின் முதலாவது தூதுவராக நியமித்துள்ளார். 

இந்த வலீத் என்பவர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் செல்வங்களை சூறையாடி அவற்றை அழித்து வரும்; கூட்டாண்மை நிறுவனங்களோடு மிகவும் பரிச்சயமானவர். இஸ்ரேலுக்கான முதலாவது கௌரவ தூதுவராக தான் பொறுப்பேற்றுள்ளமை தனக்கு பெருமை அளிக்கின்றது என்றும் ஈரானின் நிகழ்ச்சி நிரலை முறியடிக்க இஸ்ரேலுடன் கைகோர்த்து பணி புரிய தான் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் இஸ்ரேலில் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். 

இவர் கூறியுள்ள வேலைத்திட்டம் உண்மையிலேயே இஸ்ரேலின் வேலைத்திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் சியோனிஸ அரசு இதுவரை அப்பாவி பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட 60க்கும் மேற்பட்ட பாரிய படுகொலைச் சம்பவங்களுக்கு பொறுப்பாக இருந்துள்ளது. 

இன்னமும் முஸ்லிம்களின் மூன்றாவது புனித பூமியான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்து அட்டகாசம் புரிந்து வருகின்றது. அத்தகைய ஒரு அரசோடு கைகோர்த்து செயற்படுவதை தனக்கு கிடைத்த பாக்கியமாகவும் பெருமையாகவும் கருதுகின்றார் சவூதி தூதுவர் வலீத் பின் தலால். 

ஒரு வேளை அல் அக்ஸாவைப் பற்றி இவருக்கு எதுவும் தெரியாமல் கூட இருக்கலாம். அல்வலீத் யூதர்களுக்கு சொந்தமான அமெரிக்க ஊடகங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளவர். இந்த ஊடகங்கள் தான் இஸ்லாத்துக்கு எதிராக நாளாந்தம் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருபவை. 

முஸ்லிம் நாடுகள் அழிக்கப்படுவதையும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் மறைமுகமாக நியாயப்படுத்தி வருபவையும் இதே ஊடகங்கள் தான்.

'இந்த அழகிய நாட்டுக்கு சவூதி அரேபியாவின் முதலாவது தூதுவராக வருவதையிட்டு நான் உண்மையிலேயே பெருமை அடைகின்றேன். உலகில் மிகவும் கொந்தளிப்பான ஒரு பகுதியில் காணப்படும் இஸ்ரேல் ஒரு ஸ்திரமான தீவு. 

அதி உன்னதமான ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னோர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்பி உள்ளனர்' இஸ்ரேலைப் பற்றி சவூதி தூதுவர் உதிர்த்துள்ள முத்துக்கள் இவை. குற்றப் பின்னணி கொண்ட இஸ்ரேலின் வரலாறு பற்றிய தலாலின் அறிவீனத்தையே இது புலப்படுத்துகின்றது. பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொடுமைகள் பற்றி ஒரு வார்த்தையேனும் அவர் கூறவில்லை.

சவூதியின் தினசரி பத்திரிகையான அல்ஒகாஸ் 2016 ஏப்பிரல் 16 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின் படி வலீத் பின் தலாலுக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 

இஸ்ரேலுக்கான முதலாவது கௌரவ தூதுவர் என்ற வகையில் இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

ஜெரூஸலத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு மிக அருகில் இலக்கம் 14 டேவிட் பிளஸர் சென்ட் என்ற முகவரியில் சவூதி அரேபியா ஆடம்பரமான மூன்று மாடி கட்டிடம் ஒன்றை தனது தூதரக தேவைக்காக கொள்வனவு செய்துள்ளது. 

கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விருந்து வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது பணிகளை தலால் அங்கு தொடங்கியுள்ளார். இந்த விருந்தில் இஸ்ரேல் ஜனாதிபதி மற்றும்; பிரதமர் நெட்டன்யாஹு உட்பட நெஸட் (நாடாளுமன்றம்) உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இது மட்டும் அல்ல இந்த வைபவத்தில் தூதுவர் தலால் ஒரு முக்கிய அறிவிப்பையும் விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நேரடி யுத்தம் ஒன்று மூண்டால் அதில் சவூதி அரேபியா நிச்சயம் இஸ்ரேலின் பக்கம் தான் இருக்குமே தவிர பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிக்காது என்பதுதான் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அறிவிப்பாகும். 

எவ்வாறேனும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மற்றும் முழு மனித குலத்துக்கும் அவமானமாகத் திகழும் இந்த வெற்கம் கெட்ட தலால் மனித குலத்தின் அடிப்படை உரிமைகளை கூட புரிந்து கொள்ளத் தவறியுள்ளவர் என்பதை தான் இது தெளிவு படுத்துகின்றது. பலஸ்தீன மக்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான இஸ்ரேலின் குற்றங்களில் பங்கேற்பது சவூதி அரேபியாவுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல.
உதாரணத்துக்கு சவூதி இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் துரோகத்தனம் மிக்க பலஸ்தீன அதிகார சபையின் அதிகாரிகளோடு இணைந்து ஜோர்தானில் மேற்கொண்ட இரகசிய சந்திப்பு திட்டமிடல் என்பனவற்றின் மூலம் தான் 2014ல் காஸா மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. 

இந்தத் தாக்குதல் அதன் பின்னரும் பல தடவைகள் தொடரப்பட்டன. சியோனிஸ அரசின் பாஸிஸ இயல்புகளையும் சவூதி அரேபிய சர்வாதிகாரிகளின் துரோகத் தனத்தையும் பறை சாற்றுவதாக இந்தத் தாக்குதல்கள் அமைந்திருந்தன. 

இஸ்லாத்துக்கு முற்றிலும் விரோதமான இஸ்லாமிய விழுமியங்கள் அற்ற தமது காலம் கடந்த பழங்குடி அரசையும் அதில் அவர்கள் வகிக்கும் பதவிகளையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக் கொள்ளவும் அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடித்து சியோனிஸ வங்கிகளிலும் ஏனைய மேலைத்தேச முதலீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ள தமது செல்வங்களை தக்கவைத்துக் கொள்ளவும் பேய்களுடன் கூட படுத்துறங்க தயங்காதவர்கள் தான் இந்தக் கொடியவர்கள்.

தூதுவர் வலீத் தன்னை ஒரு முஸ்லிம் என்றும் அழைத்துக் கொள்கிறார். ஆனால் முஸ்லிம்களின் மூன்றாவது புனித பிரதேசமான மஸ்ஜிதுல் அக்ஸா பற்றிய சியோனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு பற்றி புரிந்து கொள்ள அவர் தவறியுள்ளார்.

இவ்வாறானதோர் பின்னணியில் தான் வளைகுடாவின் ஏனைய ஷேக்மாரும் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 1930 கள் முதல் அன்றாடம் கொடுமை இழைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் பலஸ்தீன மக்களுக்காக கொஞ்சம் கூட கவலை படாத நிலையில் தான் இவர்கள் எல்லோரும் இப்போது இஸ்ரேலின் அங்கீகாரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். 

பலஸ்தீன மக்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பறிக்கப்பட்ட காணிகளில், அதுவரை பலஸ்தீன பூமியைக் கண்டிராத ஒரு கூட்டத்துக்காக தனியான யூத குடியேற்றங்களை நிறுவி உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல் என்பதை இவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.

மனித குலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா சட்டவிதிகளையும் மீறி, மனித குலத்துக்கான எல்லாவிதமான விழுமியங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தையும் கடந்து இஸ்ரேலின் பாதுகாவலர்களான அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா மற்றும் ரஷ்யா என்பனவற்றின் அனுசரனையுடன் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றச் செயல்களின் பட்டியல் இன்னமும் தொடருகின்றது.

கத்தார் ஏற்கனவே இஸ்ரேலை அங்கீகரித்துள்ளது. பலஸ்தீன இரத்தத்தில் தோய்ந்த கரங்களைக் கொண்ட இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸை அது வரவேற்றுள்ளது. ஒமானின் சர்வாதிகாரி சுல்தான் கபூஸுக்கும் இது வழமையாகிவிட்டது. 

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் இஸ்ரேல் இன்று ஒரு மறைமுக சக்தியாகத் திகழ்கின்றது. வளைகுடாவின் இன்றைய வெற்கக் கேடான நிலை இதுதான்.

இஸ்ரேலை அங்கீகீகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நாடுகள் வரிசையில் கடைசியாக இடம் பிடித்துள்ள நாடாக குவைத் மாறியுள்ளது.

இந்த மத்திய கிழக்கு நாடுகள் அணைத்திலும் காணப்படுவது காலம் கடந்த வரலாற்றின் மத்திய காலத்துக்கு சொந்தமான பழங்குடி இனத் தலைமைகள் தான். உலகில் இன்னமும் எஞ்சியுள்ள மிக மோசமான அடக்குமுறை போக்கு கொண்ட சர்வாதிகாரிகளாகவும் இவர்களே காணப்படுகின்றனர். 

அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலை அங்கீகரிக்குமாறு இந்த நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இவ்விரண்டு நாடுகளிலும் யூத செல்வாக்கின் கீழ்தான் ஆட்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த நெருக்குதல்களுக்கு வளைகுடா ஷேக்மார் அடி பணிந்தே தீரவேண்டும் என்பது நிர்ப்பந்தம். காரணம் இவர்கள் தத்தமது நாடுகளில் மக்களைச் சுரண்டி சேமித்த சொத்துக்கள் இந்த நாடுகளில் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

தமது மக்களை அடக்கி ஒடுக்கி சம்பாதித்த இந்த சொத்துக்களில் தான் இவர்களின் எதிர்காலமே தங்கியுள்ளது.இந்த ஷேக்மாரின் பிரதான சொத்து அந்த நாடுகளின் எண்ணெய் வளம். இது இறைவன் வழங்கிய அருட்கொடையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஆனால் அவர்கள் அந்த இறைவனை மறந்து விட்டனர். அவர்கள் இருந்த நிலையை, அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து கடைசியில் மார்க்கத்தையும் மறந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யுத்த வெறியர்களோடு கைகோர்த்துள்ளனர். 

முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்படும் யூத கிறிஸ்தவ யுத்தங்களுக்காக இவர்கள் தமது செல்வத்தை செலவிடுகின்றனர். முஸ்லிம் நாடுகளில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மரணத்தையும் அழிவையும் இன்னும் சொல்லொணா துன்பங்களையும் எதிர்நோக்க இவர்கள் வழி வகுக்கின்றனர்.

தமக்கு புதிதாகக் கிடைத்த செல்வத்தின் காரணமாக இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய படைகளையும் எதிரிகளாக நோக்கும் கீழ் தரமான நிலைக்கு சென்று விட்டனர். இஸ்லாமிய அரசுகளை அழித்தொழிக்க மேற்குலக யுத்த வெறியர்களோடு கூட்டு சேர்ந்துள்ளனர். 

ஏகிப்தில் மக்களால் ஜனநாயக ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாமிய போக்கு அரசை கவிழ்க்க சவூதி ஐந்து பில்லியன் டொலர்களையும், குவைத்தும் ஐக்கிய அரபு இராச்சியமும் தலா மூன்று பில்லியன் டொலர்கள் என மொத்தம் 11 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. இன்னொரு முனையில் ஹமாஸ் இயக்கத்தை அழிக்க இஸ்ரேலுக்கு அதரவும் அளித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் குவைத் ஊடகவியலாளர் யூஸீப் அப்த் அல் கரீம் அல் சின்கவி சகல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலை அங்கிகரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் இஸ்ரேலை சியோனிஸ பிரிவு என அழைக்க வேண்டாம் எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த சொற் பிரயோகங்கள் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும் என்பதே அவரின் கருத்தாக உள்ளது.

ஊடகவியலாளர் என தன்னை அழைத்துக் கொள்ளும் இவர் பெரும்பாலும் அந்த நாட்டு அரசின் கைக்கூலியாக இருக்க வேண்டும். இவரும் இஸ்ரேலின் பின்னணி பற்றியோ, அதன் அமெரிக்க ஐரோப்பிய எஜமானர்களின் இஸ்லாத்துக்கு எதிரான யுத்தப் போக்கு பற்றியோ எதுவும் அறியாதவராக இருக்க வேண்டும். 

இந்த யுத்தங்கள் காரணமாக பல முஸ்லிம் நாடுகள் அழிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் இன்னும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிர்க்கதி நிலைக்கும் தள்ளப்பட்டு வாழ வழியின்றி அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளமையை இவர் அறிந்திருக்க மாட்டார்.

வளைகுடா நாடுகள் பல மக்களின் எதிர்ப்புக்கு அளாகியுள்ளன. அனாலும் பாவம் மக்கள் அவர்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது. ஓன்றில் அவர்கள் எதிர்த்துப் பேசி எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் அல்லது கண்டும் காணாமல் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்க வேண்டும். 

இதில் இரண்டாவது நிலையைத் தான் பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மக்கள் இப்படியே இருப்பார்கள். ஒருவேளை இன்றைய நிலை சவூதி மற்றும் பழங்குடி அரசுகளின் முடிவுக்கான ஆரம்பமாகவும் கூட அமையலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.