Breaking News
recent

அல் மஸ்ஜிதுன் நபவீயின் பிரதான இமாம் டாக்டர் முஹம்மது அய்யூப் யூஸுப் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.!


அல் மஸ்ஜிதுன் நபவீயின் பிரதான இமாம்களில் ஒருவராக சேவை புரிந்த அஷ் ஷெய்க், அல் காரி, டாக்டர் முஹம்மது அய்யூப் யூஸுப் அவர்கள் இன்று 16-04-2016 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்கள்..  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மக்காவில் பிறந்த இமாம் அவர்கள் தனது ஆறம்ப கல்வியை அங்கேயே பெற்றுக் கொண்டு பின்பு உயர் கல்வியை கற்றுக் கொள்வதற்காக மதீனா சென்று ஷரீஆவின் பல்துறைகளிலும் கற்றுத் தேர்ந்து ஒரு பெரும் உஸ்தாதாகவும் மதீனா முனவ்வராவின் மிகப் பெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவராகவும் அல் மஸ்ஜிதுன் நபவீ, மஸ்ஜித் kகுbபா உள்ளிட்ட மதீனா முனவ்வராவின் பிரபல்யமான பல மஸ்ஜித்களில் இமாமாகவும் சேவை புரிந்துள்ளார்கள்.
அன்னாரின் அழகிய குரலிலான கிராஅத்துக்களை கடந்த பல ரமழான் காலங்களின் ஸஹர் வேலைகளில் இலங்ககை வானொலி சேவை மூலமாக தொடராக செவியுற்ற பசுமையான அனுபவம் எம்மில் அனைவருக்கும் இருக்கும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இதைப் பார்க்கும் சகோதரர்கள் இவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
யா அல்லாஹ்! இவர்களுக்கு கபரின் வாழ்க்கையை இலகுவாக்கி வைப்பாயாக…
யா அல்லாஹ்! இவர்களுக்கு கபரின் கேள்விகளை இலகுவாக்கி வைப்பாயாக…
யா அல்லாஹ்! இவர்களை மறுமையில் நல்லோர்களுடன் எழுப்புவாயாக…
யா அல்லாஹ்! இவர்களுக்கு சுவர்க்கத்தை ஆகுமானதாக்கி, நரகிலிருந்தும் காப்பாயாக
யா அல்லாஹ்! இவர்களுடைய குடும்பத்தார்க்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக.
யா அல்லாஹ்! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!
இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக!
நீங்கள் முன்னே சென்றுவிட்டீர்கள், இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர இருக்கிறோம்.
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் இம்மையிலும், மறுமையிலும் நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கிவைப்பாயாக.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.