Breaking News
recent

இனி வெளிநாடுகளில் இருந்தே இந்திய ரெயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம்; இந்திய ரெயில்வே புதிய வசதி.!


தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் பயணம் செய்ய ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களது உறவினர்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. 

இந்த சிரமத்தை போக்கும் வகையில் இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தே இந்திய ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி இம்மாத இறுதியில் இருந்து துவங்ப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

இந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது ஒரு நிமி்டத்திற்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 58 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.