Breaking News
recent

பிள்ளைகள் கைவிட்ட முதியவரை பராமரித்து வரும் சவூதி அரேபி மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்.!


இப்படியும் சில நல்ல மனிதர்கள்


இங்கு நான் வேலைபார்க்கும் (சவூதி) வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரேபி வீட்டில் கடந்த இருபது வருடமாக வேலை பார்க்கும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு முதியவரின் கதை இது…
கிட்டத்தட்ட அவரை ஐந்து வருடமாக எனக்கு தெரியும்.

இப்போ அவருக்கு 57 வயசாகுது,சாதாரண வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்தாரோ என்னவோ,எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவர் வேலை பார்த்த அந்த அரேபி வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகமும் இவர்கையில்தான் இருந்தது,இவரும் ரொம்ப நேர்மையா கிட்ட தட்ட அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே இருந்தார்,அந்த பெரியாருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன், ஐந்து பேரன் பேத்திகள்…எல்லோரும் நாட்டில்தான் இருக்காங்க.

தன்னோட இந்த இருவது வருஷ வருமானம் அனைத்தயும் தன்னோட இரண்டு மகள்களுக்ம் மகனுக்கும் செலவு செய்தாரே தவிர தனக்கென பத்து பைசாகூட அவர் வச்சிக்கிட்டது கிடையாது.

சரி… வயசாயிடுச்சி,வேலை பார்த்தது போதும் இனிமே நம்ம மகள்கள் நம்மள கவனிச்சுப்பாங்கன்னு சொல்லி ரொம்ப நமபிக்கையோட,இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போயிட்டார்…ஆனா அவங்களை அனுப்ப அந்த அரேபி குடும்பதுக்கு மனசே இல்லை,இருந்தாலும் நான் என்னோட கடைசி காலத்தை என் மகள்களோடும் பேரன் பேத்திகளோடும் கழிக்கணும்னு சொல்லி அந்த அரபி குடும்பத்தை ஒரு வழியா சமாதான படுத்திட்டு இலங்கைக்கு போனாங்க.

அவர் ஊருக்கு போயி நாளே மாசம்தான் ஆகுது,அதுக்குள்ளே அவரோட ரெண்டு மகள்களுக்குள்ளும் மகனுக்கும் சண்டை வந்து,அப்பா உனக்குத்தான் எல்லாம் செஞ்சார் அதுனாலே நீதான் பாத்துக்கணும் ஒரு மகளும்,இல்லே உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கனும்ன்னு சொல்லி இன்னொரு மகளும் மாறி மாறி சண்டை போட்டிக்கிட்டு கடைசிலே ரெண்டு பேருமே இவரை கவனிக்காமளே விட்டுட்டாங்க…

எதார்த்தமா ஒரு நாள் இவங்க வேலை பார்த்த இந்த அரேபி அவருக்கு சும்மா நலம் விசாரிக்கிறதுக்காக போன் பண்ணியிருக்கார்,அப்போ அவர் உடம்புக்கு முடியாமல் மன உளச்சலுக்கு ஆளாகி நொந்து போய் ,கவனிக்க யாருமே இல்லாமே தன்னோட சொந்தகாரங்க வீட்ல படுத்த படுக்கையா இருந்திருக்காங்க.இதை கேள்விப்பட்ட அந்த அரபி உடனே இலங்கைக்கு போய்.

அவங்களை கொண்டு வந்து கொழும்பில் உள்ள பெரிய மருத்தவமனையில் ஒரு வாரம் வைத்து சிகிச்சை அளித்து அவங்க ஓரளவு குணம் அடைந்தவுடன் சவூதிக்கு கொண்டு வந்து,இங்கயும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து கிகிச்சை அளித்து பூரண குணமானவுடன் இப்போ அந்த அரேபியோட வீட்லயே கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க.

இப்போ விசிட் விசாலதான் வந்திருக்கார், குறிப்பிட்ட வயசுக்கு மேலே இங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசா அடிக்க முடியாது…இருந்தாலும் தன்னுடைய தனி அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு விசா அடிப்பதாகவும்,வேலை எதுவும் செய்ய வேண்டாம் இங்கு இருக்கும் மற்ற வேலையாட்களை வைத்து வீட்டை கவனிச்சிட்டு நீங்க சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்ன்னும் அந்த அரபியும் அரேபியின் மனைவியும் சொல்லிட்டாங்களாம்.

இத எல்லாம் அவர் சொல்லிமுடிக்கும்வரை,அவர் கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிஞ்சிட்டே இருந்துச்சு…அவருக்கு என்ன ஆறுதல் சொல்லுறதுன்னு தெரியலே.சரிங்க உங்களோட இந்த கதையே நான் பேஸ்புக்ல எழுதபோறேன்னு சொன்னேன்,

நீ எந்த புக்குளையும் எழுதிக்கோ ஆனா கடைசி காலத்துல பெத்த புள்ளைங்கள நம்பி இருந்திட வேணாம்ங்றத மட்டும் தெளிவா எழுதிடுன்னு சொன்னாங்க.இறைவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவை திறப்பான்னு கேள்வி பட்டிருக்கேன்,ஆனா உங்க விசயத்துலதான் அத நேர பாக்குறேம்மான்னு சொல்லிட்டு வந்தேன்.

இது எல்லோருக்கும் ஒரு முன் அறிவித்தல். பணம் இருக்கும் வரைதான் நமக்கு உறவுகள். இல்லை என்றால் நாம் அனாதை .இருபது வருடமாக உழைத்து கொடுத்த தனது தகப்பனை கடசிவரை பார்த்துக்கொள்ள முடியாத இன்றய எமது சமூகத்தை நினைத்து நான் கண்ணீர் விடுகின்றேன்.

அன்வர் சிஹான்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.