Breaking News
recent

ஆள் கடத்தலை தடுக்க எமிரேட்சுடன் ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல்.!


ஆட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
இந்தியா, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வீட்டு வேலைகள் செய்யவும், உதவியாளர்களாகவும், அழகு கலை நிபுணர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் செல்கின்றனர். 


இவர்களில் பலரது பாஸ்போர்ட்கள் வேலை அளிப்பவர்களால் பறிக்கப்பட்டு கடுமையான வேலைகளில் உட்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஒழுங்காக கூலி கொடுப்பதில்லை. மாறாக அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாகின்றனர்.

இதனால் ஆள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்வது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளிலும் ஆட்கள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் அமைக்கப்படும். 


இந்தப் பிரிவுகளுடன் ஆட்கள் கடத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பகிர்ந்து கொள்வர். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு தேவையான மறுவாழ்வு உதவிகள் விரைந்து செய்யப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.