Breaking News
recent

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் சகோதர்களின் பிரச்சனைகள்.!


அரபு நாடுகள் கடுமையான பொருளாதார வீழ்ச்சி, அதனாலும், அல்லாமலும் பல பிரச்சனைகள் வெளிநாட்டில் வேலை செய்யும் நம் சகோதரர் கள் அனுபவிக்கிறார்கள்.
பலர் வேலை இழக்கின்றனர்,சம்பளம் குறைவு ,இன்னும் பல…….
இதனால் மனக்குழப்பதிலும் , கவலையில் ஆகின்றனர். குடும்ப சூழ்நிலை மேலும் மேலும் அவர்களை மனஅழுத்தத்தில் கடும் அவதிபடுகின்றனர்.
இதற்கு சில தீர்வுகள்
1.குடும்ப செலவு குறைப்பது முக்கியம் .
2.எது தேவை,எது தேவையில்லை என்பதை தீரமானிக்கவேண்டும்
3.வீட்டில் வாகனங்கள், எண்ணம் குறைக்கவும்.
4.மொபைல் போன் எண்ணம் குறைக்கவும்.
5.தனியார் கல்விநிலையங்களின் அதிகமான கட்டணம் ஆராய்ந்து குறைந்த கட்டணம் தேர்வு செய்வதோ..,அரசு பள்ளிகளில் சேர்ப்பதோ செலவு குறைப்பதற்கு உதவும்
6.தனியார் ஸ்கூல் பஸ் தவிர்க்கவும், அரசு தரும் பஸ் பாஸ் பயன்படுத்தவும் பிள்ளைகளை பழக்கவும் வேண்டும்.
7.வீட்டில் மின் செலவு குறைப்பதற்கு தேவையற்ற பல்புகள் ,பேன்கள்,தரும் செலவு குறைக்கவும்.
8. ஹோட்டல் உணவுகள் ஆர்டர் செய்வதும்,அதில் ருசி தேடி அலைவதும் தவிர்க்கவும்.
9.பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கும்,மார்கெட், அக்கம் பக்கம் போவதற்கும் வாகனம் தேவை எனும் நிலை மாறி நடப்பதற்கு முயற்சி துவங்க வேண்டும்.
10.விருந்தனரை உபசரிப்பதில் தவறில்லை,விருந்தினர் உண்பதற்காகவே அல்லாமல் அவர்கள் பார்ப்பதற்கும் தங்களுக்கு பெருமை அடிப்பதற்க்கும் கூடாது
11.ஷ்பெஷல் ஐட்டம் சமைப்பதை தவிர்க்கவும்
12.ஆஸ்பத்திரி செலவு நோய் தீர்ப்பதற்காகவே அல்லாமல் பெரிய ஆஸ்பத்திரி பைவ் ஸ்டார் வசதி தேடகூடாது.
13.மாதத்தில் வாங்கும் பொருள்களின் தேவையும்,தேவையற்றதையும் பிரித்தறிந்து எது மிகவும் தேவையோ அதிலும் எவ்வளவு தேவையோ அதிலும் சிறிது அளவும் குறைத்து வாங்கும் மனநிலை வேண்டும்
14.எது வாங்கினாலும் விலை கேட்டு விசாரித்து எக்ஸ்பெயர் தியதி பார்த்து வாங்கவும்
15.சிக்கனம் என்பதை அவமானமாக கருதவேண்டாம்.
16.தொடர்ந்து ஒரே கடையில் சாதனங்கள் வாங்குவதை தவிர்த்து எது எங்கு நமக்கு பயனாகுமோ விசாரித்து வாங்கவேண்டும்.
17.உறவினர் வீட்டிற்க்கு தேவைக்கு போய்வர வேண்டும் அதற்காக பெருமைக்காக சாதனங்கள் வாங்குவதில் நம் நிலமைக்கேற்றவாறு செயல்படவும்
18.உறவினர்களுக்கு உபயோகம் இல்லாமலும் அவர்களுக்கு மனக்கவலை தரும் விதத்திலும் பொருள்களையும்,உணவு பண்டங்களையும் பரிசளித்து இருபுறமும் வீன்விரயம் செய்வதையும் தவிர்க்கவும்.
19.உறவினர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு வீன் செலவும் மனக் கவலையும் கொடுக்கவேண்டாம்.
20.முடிந்தால் வீட்டு முற்றத்தில் காய்கறி தோட்டம் வைப்பதும் ,சிறிய வருமானத்தை எதிர்பார்த்து கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு ஆகியவற்றிர்க்கு உங்களை தயார் படுத்தலாம்.
21,உண்டியல் வசூல் ,காணிக்கை, நேர்ச்சை என்பதை எல்லாம் உங்கள் நிலமையின் வருனத்தை உணர்ந்து செயல்படவும்.
22,வீட்டில் அழகு அதிகரிப்பதற்கு மாற்றி மாற்றி கட்டிட வேலை நடத்துவது,அலங்கார பொருளை வாங்கி சேர்ப்பது தவிர்க்கவும்.
குறிப்பு. மேலே கூறப்படும் அனைத்தும் கடைபிடிக்க பலரால் முடிவதில்லை, ஆனால் ஒருவர் நினைத்தால் கண்டிப்பாக முடியும்.
அவர்தான் வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி
அவர்நினைத்து விட்டால் இதுவும் இதற்கு மேலேயும் சிக்கனம் கடைபிடிக்க வழிகிடைக்கும்.
கணவரின் வருமானம் அறிந்து செலவு செய்து குடும்ப பொறுப்பினை உணர்ந்து பொருளாதாரத்தில் குடும்பத்தினை உயர்தும் மனைவி யாருக்கெல்லாம் அமைந்தார்களோ அவர்களே இவ்வுலகின் பாக்கியம் பெற்றவர்கள். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.